பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூடலூர்த் துறைமுகம்

273


லிருந்து பெட்டியில் ஏற்றலாம் சிறு பிள்ளைகளும் இந்த வேலையைச் செய்யும் அளவுக்கு அவ்வளவு அண்மையில் கரையை யொட்டித் தோணிகளும் உள்ளன - புகைவண்டிப் பெட்டிகளும் உள்ளன. இதற்கேற்றாற்போல், ஆற்றின் கரை படிப்படியான சரிவாயில்லாமல் செங்குத்தாய்த் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருக்கிறது.

துறைமுகப் பகுதியில் நின்றுகொண்டு கிழக்கே நோக்கினால், இடையிலேயுள்ள அக்கரை எனப்படும் கழிமுகத் தீவுக்கு அப்பால் கடலிலே கப்பல்கள் நின்று கொண்டிருப்பதைக் காணலாம். அதைக் காட்டும் படம் வருமாறு:

இந்தப் படம், உப்பனாற்றின் மேற்குக் கரையில் இருந்துகொண்டு எடுக்கப்பட்டதாகும். துறைமுகப் பகுதிக்கும் கடலுக்கும் நடவே தீவு தெரிவதைக் காணலாம்.

பெரிய சிறிய துறைமுகம்

கூடலூர்த் துறைமுகம் சிறிய துறைமுகமே யெனினும் சிறிய துறைமுகங்களுக்குள் பெரிய துறைமுகமாகும். இந்தியாவின் கிழக்குப் பகுதியில் நான்கு பெரிய துறைமுகங்கள் உள்ளன. அவை: (1) தமிழ் மாநிலத்திலுள்ள சென்னைத் துறைமுகம், (2) ஆந்திர மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினம் துறைமுகம், (3) ஒரிசா மாநிலத்திலுள்ள பாராதிப் (Paradip) துறைமுகம், (4) மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள கல்கத்தா துறைமுகம் ஆகியவையாம். இந் நான்கனுள் கல்கத்தா துறைமுகம்