பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

280

கெடிலக்கரை நாகரிகம்


{hwe|{சூளை,|செங்கற்சூளை}} மண் பாண்டங்கள், செம்பு பித்தளைக் கலங்கள், வண்ணப் பொம்மைகள். மரவேலைப் பொருட்கள், தென்னங் கீற்றுகள், கயிறுகள், கயிற்றுப் பொருள்கள், மீன் வலைகள், படகுகள் முதலிய பொருள்களைச் செய்தலோடு பல தொழில்கள் பல்வேறிடங்களில் பரவலாகவும் விரிவாகவும் நடைபெறுகின்றன. பண்ணுருட்டி, நெல்லிக்குப்பம், வண்டிப்பாளையம் ஆகிய இடங்கள் பல வண்ண மண் பொம்மைகளுக்குப் பெயர் போனவை. உப்பள வேலை, துறைமுக வேலை, கயிறு திரித்தல், கயிற்றுப் பொருள்கள் செய்தல், மீன் பிடித்தல், மீன் வலை பின்னுதல், மரம் அறுத்தல், படகு செய்தல், படகோட்டுதல் ஆகிய தொழில்கள் கூடலூரில் நடைபெறுகின்றன. கள்ளக்குறிச்சி வட்டத்தில் கல்வராயன் மலையடிவாரப் பகுதிகளில் மரச்சிற்ப வேலையும், சந்தன மரத்தால் சீப்பு, விசிறி, ஊன்றுதடி முதலிய பொருள்கள் செய்தலும் நடைபெறுகின்றன. பண்ணுருட்டியில் பாக்குச்சாயம் ஏற்றல், செங்கல் சூளைபோடல், மண் பாண்டத்தொழில் முதலியவை நடத்தப் பெறுகின்றன.

சிறு தொழிற்சாலைகள்

செக்கில் எண்ணெய் ஆட்டும் தொழில் சிற்றுார்களில் நடைபெறுவதன்றி, நகரங்களில் ஆலைகளில் எண்ணெய் ஆட்டப்படுகிறது. திருக்கோவலூர், பண்ணுருட்டி, கூடலூர் முதலிய இடங்களில் எண்ணெய் ஆலைகள் பல உள்ளன. பண்ணுருட்டியில் மணிலா எண்ணெய் ஆலையுடன் முந்திரி எண்ணெய் ஆலையும் இருக்கின்றது; இவ்வூரிலிருந்து, முந்திரிப் பயறு தூய்மை செய்யப்பட்டு, அமெரிக்கா போன்ற வெளிநாடுகட்கு அனுப்பப்பட்டு அந்நாடுகளின் நாணயங்களை நம் நாட்டிற்குப் பெற்றுத் தருகிறது.

முன்பு திருவயிந்திரபுரத்தில் கையால் காகிதம் செய்யும் தொழிற்சாலை இருந்தது; இப்போது எடுபட்டு விட்டது. கடலூரில் காகிதப் பொம்மைத் தொழிற்சாலை இருக்கிறது. உரத்தொழிற்சாலைகள், சோப்புத் தொழிற்சாலை, வனஸ்பதி தொழிற்சாலை முதலியவை கூடலூரில் உள்ளன. அரசினரின் அம்பர் சர்க்கா நிலையம் வடலூரில் உள்ளது.

பெரிய தொழிற்சாலைகள்

கெடிலக்கரைப் பகுதியில் - தென்னார்க்காடு மாவட்டத்திலேயே ஒரே ஒரு பெரிய தொழிற்சாலைதான் இருந்து வந்தது; அதுதான் நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை.