பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282

கெடிலக்கரை நாகரிகம்



ஐ. டபிள்யூ. ஜே. புஷ் புரொடக்ட்ஸ் கம்பெனி லிமிடெட் (I.W.J. Bush Products Company Limited.) என்னும் நிறுவனத்தார் நெல்லிக்குப்பத்தில் 4,00,000 ரூபாய் முதலீட்டில் நறுமணப் பொருள் (Flavouring Essences) p_airl Tä65th Glåm golff firóðau ஒன்று அமைத்து நடத்தி வருகின்றனர். இது, ஆண்டொன்றுக்கு 2,50,000 பவுண்ட் நறுமணச்சாரப் பொருள் வகைகளை உண்டாக்குகிறது.

கூடலூரில்

கூடலூரில், ‘கடலூர் ஆயில் புரொடக்ட்ஸ் கார்ப்பொரேஷன்” என்னும் நிறுவனத்தார் ‘மணிலா எண்ணெய்த் தொழிற்சாலை’ ஒன்று நடத்துகின்றனர். இதில் நாள் தோறும் பத்து ‘டன் எண்ணெய் உண்டாக்கப்படுகிறது. இங்கிருந்து எண்ணெய் சிங்கப்பூர், மலேசியா முதலிய நாடுகட்குச் செல்கிறது.

நெய்வேலியில்

இந்திய அரசினரால் 1955ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் குழு (Neyveli Lignite Corporation Private Limited.) நூற்றிருபது கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட முதலீட்டுடன் நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கும் செய்தி உலகறிந்த தொன்றாகும்; இங்கே ஆண்டுதோறும் பல இலட்சம் டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு அச்சுக் கட்டியாக்கப்படுகின்றது. அடுப்புக் கரிக்கட்டிகளும் இங்கே தயாரிக்கப்படுகின்றன. ரஷிய உதவியுடன் அனல் மின்சார நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே தொடங்கப்பட்டுள்ள யூரியா உரத்தொழிற்சாலை உலகிலேயே மிகப் பெரியதென மதிக்கப்படுகிறது. நெய்வேலி நிலக்கரிக் கழிவைக் கொண்டு தார், டீசல் முதலியனவும், களிமண் வகைகளைக் கொண்டு சிமிட்டி, மின் கருவிகள், அழகுப் பொருள்கள் முதலியனவும் உண்டாக்கும் தொழில் நிலையங்கள் உருவாகியுள்ளன; நெய்வேலி நிலக்கரித் திட்டத்தின் சார்பாக இன்னும் எஃகு இரும்பு முதலிய பல்வேறு தொழிற்சாலைகள் தொடங்கப்படலாம். இங்கே பல்லாயிரவர் பணிசெய்து வாழ்கின்றனர்.

வடலூரில்

வடலூர்ப் பகுதியில் ‘சேஷசாயி இண்டஸ்ட்ரீஸ்’ என்னும் நிறுவனம், மின்கருவித் தொழிற்சாலை நடத்தி வருகிறது. இதன் முதலீட்டை விசாரித்தபோது, முக்கால் கோடிக்கு மேல்