பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொழில்-வாணிகம்

283


இருக்குமெனத் தெரிய வந்தது. பக்கத்திலுள்ள நெய்வேலித் திட்டத்தின் துணையால் கிடைக்கும் களிமண்ணைக் கொண்டு மின்சார இன்சுலேட்டர் முதலிய மின் கருவிகள் இங்கே செய்யப்படுகின்றன. இன்னும் பல்வேறு வகைப் பொருள்களும் இங்கே உருவாக்கப்படுகின்றன.

இன்னும் எதிர்கலாத்தில், நெய்வேலி, நிலக்கரித் திட்டத்தின் பயனாய்க் கடலூர் வட்டத்தில் எத்தனையோ செல்வ நிலையங்கள் எழக்கூடும்.

கள்ளக்குறிச்சியில்

கள்ளக்குறிச்சியை யடுத்த மூங்கிலடித்துறை என்னுமிடத்தில், அண்மையில் கூட்டுறவு முறையில் ஒரு கரும்பாலை தொடங்கப் பெற்றுள்ளது.

வாணிக முறை

கெடில நாட்டு வாணிகப் பொருள்களைத் தொகுத்துச் சொல்லின், உணவு தானியங்கள், பயறு, கொட்டை வகைகள், கரும்பு, சர்க்கரை, இனிப்பு வகைகள், வெல்லம், உப்பு, எண்ணெய் விதைகள், எண்ணெய்கள், நறுமணப்பொருள்கள், பலசரக்குப் பொருள்கள், சாயப்பொருள்கள், துணிவகைகள், நிலக்கரி வகைகள், தோல் வகைகள், மரப் பொருள்கள், பாய் வகைகள், பாண்ட வகைகள், பொம்மைகள், பாக்கு, வெற்றிலை, சாக்கு, கயிற்றுப் பொருள்கள், மின் கருவிகள், உரம் முதலியவற்றைச் சொல்லலாம். இப்பொருள்கள் உள் நாட்டில் புகை வண்டி, பேருந்து, சுமை வண்டி (லாரி) ஆகியவற்றின் வாயிலாகப் போக்கு வரவு செய்யப்பட்டு விற்பனையாகின்றன. பொருள்கள் கடைத்தெருக்களிலும், சந்தைகளிலும் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. பண்ணுருட்டி, வளையக்காரன் குப்பம், காராமணிக்குப்பம், புதுச்சத்திரம், குள்ளஞ்சாவடி, உளுந்துார்ப்பேட்டை, மதகடிப் பட்டு, கூட்டேரிப்பட்டு முதலிய இடங்களில் சந்தை கூடும். பண்ணுருட்டி, கடலூர், நெய்வேலி, உளுந்துர்ப் பேட்டை ஆகிய இடங்களில் பெருவாரியாக வாணிகம் நடைபெறுகிறது.

ஏற்றுமதி - இறக்குமதிகள்

கெடிலநாடு கூடலூர்த் துறைமுகம், சென்னைத் துறைமுகம் ஆகிய இரண்டின் வாயிலாக வெளிநாடுகளுடன் ஏற்றுமதி - இறக்குமதி செய்கிறது. முன்பு கூடலூர்த் துறைமுகத்தின்