பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை ஊர்கள்

291


சேர்ந்து வழிபட்டது. திருமங்கையாழ்வாரின் பாடல் (மங்களா சாசனம்) பெற்றது. இங்கு நின்ற கோலத்திலுள்ள திருமால்

பெயர்: திருவிக்கிரமசாமி, உலகளந்த பெருமாள் முதலியன: தாயார் பெயர் பூங்கோயிலாள் என்பது. திருவிக்கிரமப் பெருமாள் கோயிலின் எடுப்பான மிடுக்கான தோற்றத்தை மேலேயுள்ள படத்தில் காணலாம்.

முதலில் உயரமாய்த் தெரியும் கோபுரம் கிழக்குக் கோபுரம்; பின்னால் தெரிவது மேற்குக் கோபுரம், வட புறமும் கோபுரம் உண்டு. தெற்கில் கோபுரம் இல்லை. கிழக்குக் கோபுரவாயிலுக்கு முன்னால் திருக்குளம் தெரிவதையும் படத்தில் காணலாம். (இருகோபுரங்களும் திருக்குளமும் தெரியும்படி ஒரு வீட்டு மாடியில் இருந்து கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது.) கிழக்குக் கோபுரத்திற்கும் கிழக்கே மற்றொரு கோபுரம் கோயிலோடு தொடர்பின்றிச் சிறிது தள்ளி இருக்கிறது.

இக்கோயிலில், திருமங்கைமன்னர், பாண்டிய மன்னர், விசயநகரமன்னர் முதலியோரின் திருப்பணிகள் நடை பெற்றிருப்பதாகத் தெரிகிறது. இங்கே பல கல்வெட்டுகள் உள்ளன. மற்றும் அம்மன் கோயிலுக்கு முன்னால் உள்ள மண்டபம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கத் இம் மண்டபத்தின் நீளம் 55 1/2 அடி அகலம் 31 1/2 அடி. இது போன்ற அமைப்புள்ள மண்டபங்களுள் தமிழகத்திலேயே இதுதான் மிகப் பெரியது என்று சொல்லப்படுகிறது. சிற்ப வேலைப்பாடு கட்கும் இக்கோயிலில் குறைவில்லை. இங்குள்ள பெண்டிர்