பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை ஊர்கள்

297



இஃதன்றி, வடமேற்கிலிருந்து தென்கிழக்காக ஒடிக் கொண்டிருக்கும் கெடிலக்கரைக்குத் தென்மேற்காக 4 கி.மீ. தொலைவில் கிளியூர் இருப்பது ஈண்டு மிகவும் குறிப்பிடத் தக்கதாகும். இந்தப் பகுதி ஒரு காலத்தில் மகத நாடு எனவும் அழைக்கப்பட்டது. இப்போது கிளியூர், உளுந்துர்ப்பேட்டை ஊராட்சி மன்ற ஒன்றியத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வூர் மக்கள் தொகை 2,800,

திருநெல்வெண்ணெய்

இவ்வூர் நெல் வெண்ணை, நெல் வணை, நெய்வெண்ணை, நெய் வணை என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இங்கே ஞானசம்பந்தரின் தேவாரப்பதிகம் பெற்ற சிவன் கோயில் உள்ளது. தேவாரத்தில் நெல்வெண்ணெய் என்ற பெயர் உருவமே காணப்படுகிறது. இறைவன் பெயர் வெண்ணெயப்பர்; இறைவி பெயர் நீலமர்க்கண் நாயகி. கோயிலில் கல்வெட்டுகள் உண்டு. கோயில் பழுதடைந்திருக்கிறது.

இவ்வூர் உளுந்துர்ப்பேட்டை ஊராட்சி மன்ற ஒன்றியத்தைச் சேர்ந்தது; உளுந்துார்ப்பேட்டை புகைவண்டி நிலையத்திற்கு வடமேற்கே 6 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூருக்குச் செல்ல நல்ல பாதை இல்லை. மழைக்காலத்தில் மாட்டு வண்டியில் செல்வதும் அரிது. உளுந்துர்ட் பேட்டையிலிருந்து 5 கி.மீ. தொலைவிலுள்ள நெமலி என்னும் ஊர்வரைக்கும் பேருந்து (பஸ்) வண்டியில் செல்லலாம்; பிறகு நடை வண்டி கட்ட வேண்டியதுதான்.

இவ்வூர் கெடிலக்கரைக்கு 8 கி.மீ. தொலைவில் இருந்தாலும், கெடிலத்தோடு கலக்கும் துணை ஆறாகிய தாழனோடை என்னும் சேஷநதிக்கு அண்மையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

உளுந்தூர்ப்பேட்டை

இது, சென்னை - திருச்சி பெருநாட்டு நெடுஞ்சாலையிலும் விழுப்புரம் விருத்தாசலம் புகைவண்டிப் பாதையிலுமாகக் கெடிலத்தின் தென்மேற்கே 8 கி.மீ. தொலைவில் இருக்கிறது. கெடிலத்துடன் கலக்கும் துணையாறாகிய தாழனோடை என்னும் சேஷநதிக்குத் தெற்கே 3 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது. மக்கள் தொகை 7,100,

இவ்வூரில் புகைவண்டி நிலையமும் விண்ணுார்தி நிலையமும் உள்ளன. உளுந்துக்குப் பேர் போன ஊர் இது. சந்தையும் இங்கே கூடும். இவ்வூரிலிருந்து விருத்தாசலம், திருச்சி