பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை ஊர்கள்

315


திருவாமூரை நோக்கி திருவாமூர்’ என்னும் கைகாட்டி நீட்டிக் கொண்டிருக்கும் நெடுஞ்சாலையிலிருந்து திருவாமூருக்குச் செல்லும் மண் பாதை, சிற்றுந்து வண்டி (பிளழ்சர் கார்) செல்லும் அளவுக்கு ஒரளவு வசதியாகவே இருக்கிறது.

திருவாமூர் (திரு+ஆம்+ஊர்) என்றால், எல்லா வளங்களும் நலங்களும் ஆகின்ற ஊர் - வளர்ச்சி பெறுகின்ற ஊர் என்று ஒருவகைப் பொருள் சொல்லப்படுகிறது. அதற்கேற்றாற் போலவே இவ்வூர் நீர் வளமும் நிலவளமும் செறிந்து திகழ்கிறது. அப்பர் அடிகளின் காலத்தைத் தொடர்ந்து அறங்கள் பல நிகழ்ந்த ஊர் அல்லவா இது? இவ்வூர் பண்ணுருட்டி ஊராட்சி மன்ற ஒன்றியத்தில் இப்போது சேர்க்கப்பட்டுள்ளது.

இவ்வூர்ச் சிவன் கோயிலின் பெயர் பசுபதீச்சுரம், சிவன் பெயர் பசுபதீசுரர்; அம்மன் பெயர்: திரிபுர சுந்தரி, சில ஊர்க் கோயில்களில் சிவன் ‘திருமுன்பு ‘(சந்நிதி) கிழக்கு நோக்கியும், அம்மன் ‘திருமுன்பு’ தெற்கு நோக்கியும் இருக்கும்; அவற்றுள் இவ்வூரும் ஒன்று. கோயில் சிறியது. இவ்வூரில் பிறந்த நாவுக்கரசர் இவ்வூர் இறைவன்மேல் தேவாரப் பதிகம் பாடித்தான் இருக்க வேண்டும். ஆனால் அது கிடைக்கவில்லை. அவருடைய பதிகங்கள் சில கிடைக்கவில்லை என்னும் செய்தி வேறிடத்திலும் கூறப்பட்டுள்ளது. இவ்வூர் முருகன்மேல் அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ளார். பசுபதீசுரர் கோயிலைப் பின்வரும் படத்தல் காணலாம்:

படத்தில் தெரியும் வாயில் கோயிலின் மேற்குப் புறவாயில், கோயிலின் மேல் திசையில் திருவாமூர் இருத்தலாலும், மற்ற