பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை ஊர்கள்

327


விட்டிருக்கலாம்; அல்லது, பல ஊர்களில் பாடல் பெற்ற சிவன் கோயில்களே பாழடைந்து கிடப்பதுபோல், இயற்கையாவும் இந்தக் கோயில் பாழடைந்து போயிருக்கலாம். சிலர், வீரட்டானேசுரர் கோயிலையும் குணபரேச்சரத்தையும் ஒன்று எனக் கருதுகின்றனர்; அது தவறு.

பல்லவன் சமணனாய் இருந்த காலத்தில் திருவதிகையில் சமணக் கோயில்களும் பெளத்தக் கோயில்களும் இருந்தன. நரலோக வீரன் என்னும் குறுநில மன்னன் திருவதிகையில் புத்த பிரானுக்குக் கோயில் ஒன்று கட்டியதாகக் கல்வெட்டு ஒன்றால் அறியப்படுகிறது.

திலகவதியாரும் திருநாவுக்கரசரும் தங்கியிருந்த மடமும், அவர்கள் வளர்த்த மலர் வனமும் இன்றும் திருவதிகையில் உள்ளன. இவர்கள் தெருவையும் திருக்கோயிலையும் மிகவும் தூய்மையாகச் செய்து வந்தனர். திருவிழாக் காலங்களில் தெருக்களைத் திருவதிகையைப் போல் தூய்மை செய்ய வேண்டுமெனப் பல ஊர்களிலும் திருவீதி ஆண்டார்கட்கு அந்தக் காலத்தில் ஆணையிடப்பட்டிருந்ததாகப் பல ஊர்க் கல்வெட்டுகள் அறிவிக்கின்றன. பாண்டிய நாட்டுப் பக்கத்தில் பெருவிழாக் காலங்களில் கொடியேற்று விழாவிற்கு முதல் நாள் திருநாவுக்கரசர் திருவீதி காணும் திருவிழா நடைபெறுவது மரபு. இச் செய்திகளிலிருந்து, அப்பர் பெருமானது அரிய உழவாரப் பணியின் மாண்பும், திருவதிகைமேல் பாண்டியர்க்கு இருந்த ஈடுபாடும் நன்கு புலனாகும்.

திருநாவுக்கரசர் திருப்பணி செய்த இடமாதலால் திருவதிகையைக் காலால் மிதிக்கக் கூடாது என்று கருதி, சுந்தரர் முதலில் திருவதிகைக்குள் வராமல் தொலைவிலேயே சித்தவட மடத்தில் தங்கியிருந்தார் என்னும் [1]பெரிய புராண வரலாறு ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

பாரத காலத்தில், நீர்ச் செலவு (தீர்த்த யாத்திரை) மேற் கொண்ட அர்ச்சுனன் தென்னாடு வந்தபோது திருவதி கையையும் வழிபட்டான் என்னும் செய்தி, வில்லிபாரதம் ஆதிபருவம் அர்ச்சுனன் தீர்த்த யாத்திரைச் சருக்கத்திலுள்ள 17 ஆம் பாடலால் தெரிகிறது; அப்பாடல் வருமாறு:

"ஐயானன னியல்வாணனை அடிமைக்கொள மெய்யே

பொய்யாவண மெழுதும்பதி பொற்போடு வணங்கா

  1. *பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் : 83.