பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெடிலத்தின் தோற்றம்

33


செறிந்த சூழல்தான் காட்சியளித்துக் கண்கட்கு விருந்துட்டுகிறது. தென்னார்க்காடு மாவட்டத்திலேயே கள்ளக்குறிச்சி வட்டத்தில்தான் காடும் மலையும் மிகுதி.

கருடன் பாறை

மையனூர் மலையின் அடிவாரத்தில் - கிழக்குப்புறத்தில் தனித்த பாறை ஒன்று உள்ளது. அது 15 அல்லது 20 அடி உயரம் இருக்கலாம். அப் பாறையின் பெயர் கருடன் பாறை’ என்பது. அப் பாறை கருடன் அலகுபோல் இருப்பதாகவும், அப் பாறையில் கருடன் அலகால் கீறிச் சுனை உண்டாக்கியதாகவும் அவ் வட்டாரத்து மக்களால் கூறப்பட்டு ஒருவகைப் பெயர்க்காரணம் கற்பிக்கப்பட்டுள்ளது. அந்தக் கருடன் பாறையை இப் படத்தில் காணலாம்.

சுனை

இந்தப் படமும் பாறையின் கிழக்குப்புறத்தில் இருந்து கொண்டு எடுத்ததுதான். பாறையில் நின்று கொண்டிருப்பவரின் வலக் காலடிக்கு அண்மையில் பாறையின் கீழ்பால் தரையை ஒட்டிக் கறுப்பாக மொத்தையாகப் படத்தில் ஒரு ப்குதி தெரிகிறதே. அங்கே ஒரு சுனை உள்ளது. சுனையைச் சுற்றிச் செடி - கொடி புதர் அடர்ந்து சூழ்ந்திருப்பதால் சுனை தனியாகத் தெளிவாகத் தெரியவில்லை. எனவே, சுனையை மட்டும் தனித்துப் பிரித்து ஒரு படம் எடுக்க வேண்டியதாயிற்று. சுனையின் தோற்றத்தைப் பின்வரும் படத்தில் காணலாம்.

கெ.3.