பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை ஊர்கள்

345


முசுலீம்கள் மிகுதி. கிறித்தவர்களும் ஒரளவு உள்ளனர். 1893ஆம் ஆண்டு ஊராட்சி மன்றம் (பஞ்சாயத்து ஆட்சி) பெற்ற இவ்வூர், வளர்ந்து 1967 ஆம் ஆண்டு நகராட்சி மன்றம் (முனிசிபல் ஆட்சி) பெற்றுள்ளது. கரும்பு, வெற்றிலை, அகத்திக்கீரை ஆகிவற்றிற்கு நெல்லிக்குப்பம் பேர் போனது.

ஒரு நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக நெல்லிக் குப்பத்தைத் திக்கெட்டிலும் விளம்பரப்படுத்திக் கொண்டிருப்பவை, அங்கிருக்கும் பாரி கம்பெனியின் சர்க்கரை ஆலையும் இனிப்புப் பண்டத் (மிட்டாய்) தொழிற்சாலையும் ஆகும். ‘ஸ்பிரிட்’ (Spirits), ‘கார்பானிக் ஆசிட் காஸ் (Carbonic Acid Gas) ஆகியவையும் சர்க்கரை ஆலையில் செய்யப்படுகின்றன. இங்கு உண்டாக்கப் படும் பொருள்கள் வெளிநாடுகட்கும் அனுப்பப்படுகின்றன.

நெல்லிக் குப்பம் சர்க்கரை ஆலை 1848 ஆம் ஆண்டு பாரி கம்பெனியாரால் அமைக்கப்பட்டது. இது தொடக்கத்தில் ஆண்டுக்கு 1,60,000 காலன் வீதம் சாராயமும் உண்டாக்கியது. நாளடைவில் சாராயத்தை நிறுத்திவிட்டுச் சர்க்கரையில் முழுக் கவனம் செலுத்தி வருகிறது. மிகப் பெரிய முதலீட்டில் இந்த ஆலை நடைபெறுகிறது. மூவாயிரவர்க்கும் மேற்பட்டவர் தொழில் புரிகின்றனர். பாரி கம்பெனியார் 1811இல் சிதம்பரத்திலும், 1843இல் வண்டிப் பாளையத்திலும், 1848இல் நெல்லிக் குப்பத்திலும், கள்ளக்குறிச்சியிலும், 1855இல் திருவெண்ணெய் நல்லூரிலும் சர்க்கரை ஆலைகள் நிறுவினர். இவற்றுள், நெல்லிக் குப்பம் ஆலை ஒன்று மட்டுமே இப்போது நடைபெறுவதைக் கொண்டு இந்த ஆலையின் சிறப்பை உணரலாம். இந்தியாவின் மிகச் சிறந்த சர்க்கரை ஆலையாக இது மதிக்கப்படுகிறது. நெல்லிக் குப்பம் புகைவண்டி நிலையத்தி லிருந்து இந்த ஆலைப் பகுதிக்குப் புகைவண்டிப் பாதைத் தொடர்பு உண்டு.

இஃதன்றி, பாரி கம்பெனியார் நெல்லிக்குப்பத்தில் பெரிய முதலீட்டில் இனிப்புப் பண்டத் தொழிற்சாலை ஒன்றும் (Confectionary) நடத்தி வருகின்றனர். இத் தொழிற்சாலை இனிப்பு (மிட்டாய்) வகைகளுடன் குளுகோஸ் (Glucose), எசன்ஸ் (Essences) முதலியனவும் செய்து வருகிறது. இங்கே செய்யப்படும் பொருள்கள் இந்தியா முழுவதிலும் விற்பனையாகின்றன.

காராமணிக் குப்பம்

இவ்வூர் கடலூருக்கு மேற்கே 8 கி.மீ. தொலைவில் கடலூர் திருக்கோவலூர் மாநில நெடுஞ்சாலையில் கெடிலத்தின்