பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

376

கெடிலக்கரை நாகரிகம்



மேலே முதல் பாடலின் தொடக்கத்திலுள்ள ‘பாடலி புத்திரம் என்னும் பதி’ என்னும் தொடரைக் காணுங்கால், பாடலிபுத்திரம் ஒரு தனி ஊராக இருந்தமை புலனாகும். மற்றும், அங்கே சமணமதத் தலைமையகம் இருந்தமையும், அங்கே சமணமதக் கலைகள் பல பயிற்றப் பட்டமையும், திருநாவுக்கரசர் தருமசேனர் என்னும் தலைமைப் பட்டப் பெயருடன் தலைமை தாங்கியிருந்தமையும் பாடல்களால் அறியப்படுகின்றன. பாடலிபுத்திரத்தில் சமணமதத்தின் தலைமையகம் ஒன்று இருந்ததென்றால், அங்கே பல கலைகள் பயிற்றப்பட்டன என்றால், அங்கே பெருந்தலைவர் ஒருவர் தலைமை தாங்கியிருந்தார் என்றால், அப்பாடலிபுத்திரம் ஒரு சிற்றூராக இருந்திருக்க முடியாது; ஒரு பேரூராகவே இருந்திருக்க வேண்டும்.

சமண நூல்களைக் கொண்டு பார்க்கும் போதும், பாடலி புத்திரம் அன்று பெற்றிந்த பெருமை புலனாகிறது. இவ்வூர் மூன்றாம் நூற்றாண்டிலேயே சமணர்களின் சிறப்பிடமாய்த் திகழ்ந்தது. ஐந்தாம் நூற்றாண்டில் சிம்மசூரி, சரவ நந்தி முதலிய சமணப் பெரியார்கள் இங்கே தங்கியிருந்தனர். சரவ நந்தியானவர் சிம்ம நந்தியின் உலோக விபாகத்தைப் புகழ்ந்து நூல் எழுதியது பாடலிபுத்திரத்தில்தான்! ஏழாம் நூற்றாண்டு வரையும் பாடலி புத்திரம் மிகச் சிறப்புற்றிருந்தது.

இங்கே சமணர்க்குத் தலைமை தாங்கியிருந்த நாவுக்கரசருக்குச் சூலைநோய் உண்டாக, அவர் தம் தமக்கை திலகவதியாரின் துண்டுதலால் சமணர்க்குத் தெரியாமல் இரவோடிரவாகப் பாடலிபுத்திரத்தினின்றும் புறப்பட்டுத் திருவதிகை போய்ச் சேர்ந்தார். இதனைச் சேக்கிழார்,

[1]பெரிய புராணம் - திருநாவுக்கரசர் - 61.“பொய் தருமால் உள்ளத்துப்
புன்சமணர் இடங்கழிந்து
மெய் தருவான் நெறியடைவார்
வெண் புடைவை மெய்சூழ்ந்து
கைதருவார் தமையூன்றிக்
காணாமே இரவின்கண்
செய்தமா தவர்வாழுந்
திருவதிகை சென்றடைவார்”

என்னும் பாடலில் தெரிவித்துள்ளார். இப்பாடலில் ‘சமணர்


  1. பெரிய புராணம் - திருநாவுகரசர்- 61