பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

378

கெடிலக்கரை நாகரிகம்


ஏந்தியே கொண்டெழுந்த தருளு வித்தனன்
பூந்திருப் பாதிரிப் புலியூர்ப் பாங்கரில்"
தொழுந்தகை நாவினுக் கரசுந் தொண்டர்முன்
செழுந்திருப் பாதிரிப் புலியூர்த் திங்கள்வெண்
கொழுந்தணி சடையனைக் கும்பிட் டன்புற
விழுந்தெழுந் தருள்நெறி விளங்கப் பாடுவார்."

இப் பாடல்களில், நாவுக்கரசர் திருப்பாதிரிப் புலியூர்ப் பக்கத்தில் கரையேறியதாகவும், திருப்பாதிரிப் புலியூரில் சிவனை வழிபட்டதாகவும் சேக்கிழார் கூறியிருக்கிறாரேயொழிய, பாடலிபுத்திரத்தின் பக்கத்தில் கரையேறியதாகவோ பாடலி புத்திரத்தில் சிவனை வழிபட்டதாகவோ கூறவில்லை. இதைக் கொண்டு, பாடலிபுத்திரமும் திருப்பாதிரிப் புலியூரும் வெவ்வே றானவை என்பது சேக்கிழார் கருத்து என உய்த்துணரலாம்.

அடுத்தபடியாக, சமணரைவென்ற நாவுக்கரசரால் சைவனாக மாற்றப்பட்ட மகேந்திரவர்மப் பல்லவன், பாடலிபுத்திரத்தில் இருந்த சமணக் கோயில், மடம் முதலியவற்றை இடித்துக் கொண்டு வந்து திருவதிகையில் ‘குணபரேச் சரம்’ என்னும் சிவன்கோயில் கட்டியதாகச் சேக்கிழார் பாடியுள்ளார்:

[1]"வீடறியாச் சமணர்மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த
காடவனும் திருவதிகை நகரின் கண் கண்ணுதற்குப்
பாடலிபுத் திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும்
கூட இடித் துக்கொணர்ந்து குணபரஈச் சரம்எடுத்தான்

என்பது பாடல். இப் பாடலால் பாடலிபுத்திரம் பல்லவ மன்னனால் அழிக்கப்பட்டது என்பது புலனாகும். முற்காலப் பல்லவர்கள் ஆட்சி தொடங்கிய மூன்றாம் நாற்றாண்டிலிருந்து சிறப்புற்று விளங்கிய பாடலிபுத்திரம், ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மகேந்திரவர்மப் பல்வன் ஆட்சியில் வீழ்ச்சியுற்றது.

இதுகாறுங் கூறி வந்த பெரிய புராண இலக்கியச் சான்றுகளைக் கொண்டு, ‘சமணப் பள்ளிகளையும் பாழிகளையும் கொண்டிருந்த பாடலிபுத்திரம் வேறு; சிவன் கோயிலைக் கொண்ட திருப்பாதிரிப் புலியூர் வேறு; இக் காலத்தில் ஆராய்ச்சியாளர் பலரும் தெரிவிப்பதுபோல் இரண்டும் ஒன்றல்ல’ - என்னுங் கருத்து தெள்ளத் தெளிய


  1. பெரிய புராணம் - திருநாவுக்கரசர் - 146.