பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை ஊர்கள்

381


நாயடு என்னும் முதியவர் குறிப்பிடப்பட்டிருக்கிறார். கெடிலம் முற்காலத்தில் வண்டிப் பாளையம் அருகே ஓடியதாகவும், அந்தப் பகுதியில் நிலத்தைத் தோண்டிய போது அடியில் கல்மரத் துண்டுகள் (Wood Fossil) அகப்பட்டதாகவும் முதியவர் முத்தால் நாயடு கூறியதாக அத் தலைப்புகளில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. முதியவர் முத்தால் நாயடுவிடம் நான் மேலும் சில வினவினேன்.

நான் : இந்த ஊருக்குப் பாதிரிக் குப்பம் என்று ஏன்
பெயர்வந்தது? -
முதியவர் : அந்தக் காலத்தில் பாதிரி மரங்கள் அடர்ந்
திருந்ததால் பாதிரிக்குப்பம் என்று பெயர் ஏற்பட்டதாகச் :::சொல்லுகிறார்கள்.
நான் : பழைய காலத்தில் இந்த ஊருக்கு என்ன
பெருமை இருந்தது?
முதியவர் : என்ன பெருமை - ஒன்றும் தெரியவில்லையே!
நான் : கோயில் குளம் - அப்படி - இப்படி என்று
ஒன்றும் பெருமை இருக்கவில்லையா?
முதியவர் : ஒ, அதுவா! ஏதோ கோயில் குடிக்காடு ஒரு
காலத்தில் இருந்ததாகவும், அப்புறம் அழிந்து போய் :::விட்டதாகவும் சொல்கேள்வி.
நான் : என்ன கோயில் என்று தெரியுமா?
முதியவர் : தெரியாது.
நான் : சிவன் கோயிலா? பெருமாள் கோயிலா?
முதியவர் : நம்ம சாமி கோயில் இல்லை; வேறு சாமி
கோயிலாம்.
நான் : வேறு சாமி கோயில் என்றால்...?
முதியவர் : ஏதாவது கிறித்தவர் கோயிலாயிருக்கும்.
நான் : கிறித்தவர் கோயில் என்றால், இங்கே யாராவது
கிறித்தவப் பாதிரிமார்கள் இருந்திருப்பார்களா? அதனால்தான் இவ்வூருக்குப் பாதிரிக் குப்பம் என்னும் பெயர் ஏற்பட்டதா? அல்லது நீங்கள் முதலில் சொன்னவாறு பாதிரிமரம் இருந்ததால் இப் பெயர் ஏற்பட்டதா?
முதியவர்: ஒன்றும் சரியாகத் தெரியவில்லை.