பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை ஊர்கள்

395


1902இல் மீண்டும் கல்லூரி வகுப்புகள் எடுபட்டு விட்டன. உயர் நிலைப் பள்ளிப் பிரிவு ஸ்கூல் கமிட்டி (School committee) என்னும் குழுவால் நடத்தப் பெற்று வந்தது. 1920 ஆம் ஆண்டில் அந்தக் குழுவினிடமிருந்து உயர்நிலைப் பள்ளியை நகராட்சி ஏற்று இங்கே நடத்தி வருகிறது.

இந்த உயர்நிலைப் பள்ளிக்குப் பக்கத்தில், 1967இல் பச்சையப்பன் உதவி நிதியைக் கொண்டு தனியார் பெண்கள் கல்லூரி ஒன்று தொடங்கப்பட்டது. இப்போது இது, மஞ்சக் குப்பத்திலிருந்து நெல்லிக் குப்பம் பக்கம் போகும் நெடுஞ் சாலை தொடங்கும் சிறிது தொலைவில், ‘கந்தசாமி நாயடு பெண்கள் கல்லூரி’ என்னும் பெயரில் தனிக்கட்டடத்தில் நடைபெற்று வருகிறது. புதுப் பாளையத்தின் கிழக்குக் கோடியில் அரசினர் ஆண்கள் கலைக் கல்லூரி இருக்கிறது.

1963இல் தொடங்கப் பெற்ற இந்தக் கல்லூரி, புதுப் பாளையத்தின் வடக்கு எல்லைப் பாதையும் தெற்கு எல்லைப் பாதையும் கிழக்கே குவிந்து ஒன்று கூடும் இடத்தில் தேவனாம் பேட்டைக்குப் போகும் வழியில் அமைக்கப் பெற்றது. இப்போது இது விரிவான கட்டடத்தில் இயங்கி வருகிறது.

மற்றும், புதுப்பாளையம் பகுதியிலுள்ள தென்னார்க்காடு மாவட்ட மைய நூலகம் மிகவும் குறிப்பிடத்தக்கது. இது 1952இல் தொடங்கப் பெற்றது. தென்னார்க்காடு மாவட்ட நூலக ஆணைக்குழு (Local Library Authority) இந்நூலகத்தைச் சிறந்த முறையில் இயக்கி வருகிறது. இதில் ஏறத்தாழத் தரமான