இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
- "நிலாநிலா ஓடிவா - நில்லாமல் ஓடிவா
- மலைமேலே ஏறிவா - மல்லிகைப்பூ கொண்டுவா
- நடுவிட்டிலே வை - நல்ல துதிசெய்
- வெள்ளிக் கிண்ணத்தில் பால்சோறு
- அள்ளிஎடுத்து அப்பா வாயில்
- கொஞ்சிக் கொஞ்சி ஊட்டு
- குழந்தைக்குச் சிரிப்பு காட்டு." 3
- "சாய்ந்தா டம்மா சாய்ந்தாடு
- சாயுங் காலத்திலே சாய்ந்தாடு
- சாய்ந்தா டம்மா சாய்ந்தாடு
- சாலைக் கிளியே சாய்ந்தா
- குத்து விளக்கே சாய்ந்தா
- கோயில் புறாவே சாய்ந்தாடு
- மாடப் புறாவே சாய்ந்தாடு
- மணி விளக்கே சாய்ந்தாடு
- சாய்ந்தா டம்மா சாய்ந்தாடு.” 4
- “கைவீ சம்மா கைவீசு
- கடைக்குப் போகலாம் கைவீசு
- பூந்தி வாங்கலாம் கைவீசு
- பொருந்தி உண்ணலாம் கைவீசு
- மிட்டாய் வாங்கலாம் கைவீசு
- மெதுவாய்த் தின்னலாம் கைவீசு
- கைவி சம்மா கைவீசு.’’ 5
- “தட்டாங்கி தட்டாங்கி
- தட்டாங்கி கொட்டம்மா தட்டாங்கி
- தட்டாங்கி தட்டாங்கி
- தட்டாங்கி கொட்டுமாம் பெண்ணு
- தயிரும் பழையதும் தின்னு
- ஆப்பத்தைக் கண்டால் அமுக்குமாம் பெண்ணு
- அழாதேன்னு சொன்னால் இருக்குமாம் பெண்ணு"