பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்வி-கலைத்துறை

493


அளித்துவந்தனர். அந்தக் காலத்தில் இந்தப் பகுதியில் ஆடற்கலை பெற்றிருந்த பெரு வளர்ச்சிக்குத் திருக்கோவலூர், திருவதிகை, பாகூர் முதலிய கோயில்களில் உள்ள ஆடற்

சிற்பங்கள் போதிய சான்று பகரும். எடுத்துக்காட்டாக, பாகூர்ச் சிவன் கோயிலிலுள்ள பல்வேறு ஆடல் சிற்பங்களுள் ஓர் ஐந்தினை மட்டும் இங்குக் காண்போம். ஐந்தும் கோயிலின் வடக்குத் திருச்சுற்றில் உள்ளன. இவை பத்தாம் நூற்றாண்டில் படைக்கப் பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இந்த ஐந்துக்கு மேலும் பல ஆடற் சிற்பங்கள் பாகூர்க் கோயிலில் உள்ளன. சிற்பங்களின் முகங்கள் சிறுவர்களால்