பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

504

கெடிலக்கரை நாகரிகம்


பேரிரக்கமாகிய கண்ணோட்டமே நாகரிகம் என வள்ளுவனார் மொழிந்துள்ளார். இதனைத் தெளிவு செய்து கொள்வதற்காகத் திருக்குறள் பொருட்பாலில் ‘கண்ணோட்டம்’ என்னும் தலைப்பிலுள்ள பத்துக் குறட்பாக்களும் வருமாறு:

கண்ணோட்டம்

 கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு. 1

கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை. 2

பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னும்
கண்ணோட்டம் இல்லாத கண். 3

உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண். 4

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும். 5

மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர். 6

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல். 7

கருமஞ் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்தில் வுலகு. 8

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை. 9

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர். 10

திருவள்ளுவர் கண்ணோட்டத்தைப் பற்றிய பத்துக் குறள்களுள் முதல் ஒன்பது குறள்களில் கண்ணோட்டம் என்னும் சொல்லை இட்டுக் காட்டியுள்ளார்; இறுதியான பத்தாவது குறளில் கண்ணோட்டம் என்னும் சொல்லுக்குப் பதிலாக நாகரிகம் என்னும் சொல்லைப் பெய்துள்ளார். எனவே, நாகரிகம் என்னும் சொல்லுக்கு வள்ளுவனார் தரும் பொருள் ‘கண்ணோட்டம்’ என்பது புலனாகிறது.

‘கண்ணோட்டம் இல்லையேல் உலகம் இல்லை; கண்ணோட்டம் இல்லாதவர் கண்ணில்லாதவர்; கண்ணோட்டம் உடையவர்க்கு உலகம் உரியது; தம்மைத் துன்புறுத்தும் கொடியோரிடத்தும் கண்ணோட்டம் கொள்வதே தலையாய பண்பு’ என்றெல்லாம் கூறிவந்த