பக்கம்:கெடில வளம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெடிலவள்ம் ۔ ماسه இருக்கு வந்து சிவன்:விழிபட்டார் என்பது புராண: இம்ாண் வழிபட்ட இடமாதலின் மாணி குழி எனப் 1. கோயிலில் இலிங்கம் இருக்கும் கருவறைப் : . ... •. பள்ளமாக்-குழியாக் இருக்கும். எப்போதும் தண்ணிர் சுரந்துகொண்டிருக்கும். எனவே, மாணி'. வழிபட்ட குழி மாணி குழியாயிற்று என்று பெயர்க் காரணம் கூறப்படுகின்றது. , திருமரணி குழியில் சோழர், பாண்டியர், இராட்டிர கூடர் முதலியோர் காலத்துக் கல்வெட்டுகள் பல உள்ளன. இரண்டாம். குலோத்துங்க சோழன் (கி. பி. 1186 - 150) இவ்வூரில் முடி சூட்டிக்கொண்டதாக, ஒரு கல்வெட்டு கூறுகின்றது. சோழன் தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய தலைநகரங்களை விட்டுவிட்டு இங்கே வந்து முடி . சூட்டிக்கொண்டது ஏன்? இரண்டாம் குலோத்துங்க சோழன் கர்லத்தில் பகைவர் எவரும் சோழநாட்டின்மேல் படையெடுக்கவில்லை; பரந்து விரிந்து கிடந்த சோழப் பேரரசில் அன் து அமைதி நிலவியது. ஆயினும், சோழப் பேரரசால் ஆங்காங்கே அமர்த்தப்பட்டிருந்த ஆட்சிப் பேராளர்கள் (பிரதிநிதிகள்) சிலர். தமது மேற்பார்வையில் இருந்த பகுதிகளைத் சமக்கு உரிமையாக்கிக்கொள்ளத் தொடங் ... " தினர். இந்த நிலையில், திருமாணி குழிப்பகுதிக்குப் பொறுப் பேற்றிருந்த ஆளுநரும் (கவர்னரும்) சோழப்பேரரசுக்கு அடங்காது அப் பகுதியைத் தமதாக்கிக் கொண்டிருக்கலாம். செய்தியறிந்த குலோத்துங்கன் ஆங்குச் சென்று அவரை யடக்கி, o w - ,"ס - • * g - • ஆப் பகுதிக்குத் தா 5ன శిశిల మిశr எனபதை உறுதிப் படுத்தும் முறையில் திருமாணி குழியில் முடிசூட்டிக்கொண்டிருக்கலாம். திருவயிந்திரபுரம் : கெடிலக்கரையை ஒட்டியுள்ள ஒரே ஒரு வைணவத்திருப் பதியான திருவயிந்திரபுரம், கடலூர்த் தலைநகரப் பகுதிக்கு மேற்கே 7கி. மீ தொகலவில்- கடலூர்த் திரிப்பாதிரிப்புலியூருக்கு மேற்கே 5 கி. மீ. தொலைவில் கடலூர் - திருக்கோவலூர் மாவட்ட நெடும்பாதையில், கெடிலத்தின் கிழக்குக் கரையில் கெடிலக்கரை ஊர்கள் 重é安” இமைந்திருக்கிறது. வசகால்பட்டுப் புகைவண்டி நில்ைய்ம் திரு. ஆவிந்திரபுரத்திற்கு மிகவும் அணித்தாகும். இந்த நிலையத்நீதிற்கும் திருவயிந்திரபுரத்திற்கும் இடையே கெடிலம்- ஆறு இடக்கும்-கிழக்குமாக வளைந்து செல்கின்றது. இந்த நிலையத்தி: விருந்து ஒன்று அல்லது ஒன்றரை கி. மீ. தொலைவு- தெற்கு. நோக்கி நடந்து - ஆற்றின் வளைவைக் கடந்து திருவயிந்திர, புரத்தை அடையவேண்டும். நடக்க முடியாதவர்கள். திருப் நாதிரிப் புலியூர்ப் புகைவண்டி நிலையத்தில் இறங்கி வண்டி பிடித்துக்கொள்ள வேண்டும். இந்த நிலையம் விழுப்புரம் -- |கூடலூர்ப் பாதையில் இருக்கின்றது. - - ; திருவயிந்திரபுரம் கோயில் தேவநாதசாமி கோயில் எனவும் தெய்வநாயகப் பெருமாள் கோயில் எனவும் அழைக்கப்படும். பெருமாள் பெயர்: தேவநாதர், தெய்வநாயகப் பெருமாள், ಟಕಿ பெயர்: வைகுந்த நாயகி, செங்கமலத் தாயார். உன்ரின், பெயர் நாலாயிரப் பிரபந்தத்தில் திருவயிந்திரபுரம்' எனக் உறப்பட்டுள் ளது. இப் பெயர் இன்று திருவந்திபுரம்' எனச் கருங்கிவிட்டது. இதனையே மக்கள் தமது"திருந்தாத கொச்சை வழக்கில் 'திருந்திபுரம்' எனக் கூறுகின்றனர், வேதாந்த தேசிகர் முதலிய வைணவப் பெருமக்கள் திரு. வயிந்திரபுசத்தருகில் ஒடும் கெடிலத்திற்கு ஒரு பெருமை கற். பித்துள்ளனர். தமிழ் நாட்டில் ஆறுகள் மேற்கு - கிழக்காக ஒடுகின்றன : இவ்வாறே மேற்கு - கிழக்காக ஒடிவரும் கெடிலம் திருவயிந்திரபுரத்தில் வ. சகு நோக்கித் திரும்பித் தெற்கு, வடக்காக ஓடுகின்றது. இவ்வாறு வடக்கே நோக்கி ஓடுவது ஒரு புதுமையாம் - அற்புதமாம். இங்கே வடக்கு நோக்கி ஓடுவதால் கெடிலத்திற்கு 'உத்தர வாகினி' என்னும் சிறப்புப் பெயர் ஈந்து போற்றியுள்ளனர் பெருமக்கள். இந்த அடி ப்படையில், திருவயிந்திரபுரம் என்னும் பெயர் வந்ததற்கு ஒரு புதுக் காரணம் கற்பித் துக் கூற விரும்புகின்றேன் அடியேன். அயிந்திரம் என்னும் சொல்லுக்குக் கிழக்கு என்னும், பொருளும் உண்டு கெடிலத்தின் கிழக்குக் கரையில் இருக்கும் ஊர் ஆதலின் "அயிந்திரபுரம்' என்னும் பெயர் ஏற்பட்டிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கெடில_வளம்.pdf/58&oldid=810777" இலிருந்து மீள்விக்கப்பட்டது