பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. குடியேற்றம்

 இந்திய வரலாற்றில் பொ ன் னே டு களை நிரப்பிய பெருமை இராசபுத்திரர்களுக்கு உண்டு. இராசபுத் திர இனத்தார் அஞ்சாமையும்; வீரமும் நாட்டுப் பற்றும், மான உணர் ச் சி யும் மிக்கவர்கள் ; இந்தியப் பெரு நிலத்தின் பெரும் பகுதியை ஒரு குடைக்கீழ்க் கட்டியாண்ட மாமன்னன் அக்பரையே தம் வாள் வீரத்தால் திணற அடித்தவர்கள். இத்தகைய அரும்பெரும் பேராற்றல்கள் இராச புத் திரர் களிடம் நிரம்பியிருந்தமைக்கு அடிப்படைக் காரணம் ஒன்று உண்டு.
 நட்டாசியாவிலிருந்து வளமிக்க இந்திய நாட்டைக் கைப்பற்றுவதற்காக ஹணர்கள், சாகர்கள், பார்த்தியர்கள் குஷானர்கள் என்ற பல முரட்டுக் கூட்டத்தார்கள் படை யெடுத்தனர். ஒவ்வோர் இனத்தவரும் சிலகாலம் இந்திய நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி புரிந் தனர். பிறகு கால வெள்ளத்தில் அவர்கள் ஆட்சி சரிந்தது ஆட்சிப் பெருமையிழந்த அவ்வினத்தார் இந்திய மக்களோடு நாளடைவில் இரண்டறக் கலந்துவிட்டனர். அவ்வினக் கலப்பால் புதிய இனமொன்று தோன்றலாயிற்று. அவ் வினமே இராசபுத்திர இனமாகும். பல இனத்தாரின் குருதிக் கலப்பில் தோன்றிய அப்புதிய இனம் மிகவும் ஆற்றலோடு விளங்கியது. இந்திய வீர வரலாற்றுக்கும், கலாசார வரலாற் றுக்கும் புதிய பெருமைகளைத் தேடிக் கொடுத்தனர் அவ் விராசபுத்திர இனத்தார். அமெரிக்கர்களைஇவ்விராசபுத்திர இனத்தாரோடு ஒப்பிடலாம்.
 சங்க காலமான கி. பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே ஐரோப்பிய நாடுகளுக்கும், ஆசிய நாடுகளுக் கும் வாணிகத் தொடர்பு இருந்தது என்பதைக் கிரேக்க, ரோம் வரலாற்றாசிரியர்களின் குறிப்புகளிலிருந்து அறியலாம்.