பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6


செய்வார்கள்? பசியும் பட்டினியும் அவர்களை வருத்தத் தொடங்கின.

 'பசி வந்தால் பத்தும் பறந்து போம்' என்னும் முதுமொழிக் கிணங்க, உ ற் றா ர் உறவினரையும் மறந்து விட்டுக் குடும்பம் குடும்பமாக உழவர்கள் பிறந்த பொன் னாட்டை விட்டு வெளியேறத் தொடங்கினர்; முதுமையால் தளர்ந்துபோன கிழவர்களையும், நடக்கும் திறனற்ற பிஞ்சுக் குழந்தைகளையும் பள்ளங்களில் சாக விட்டுவிட்டு வெளி யேறினர். வெளியேறும் துணிச்சலற்றவர்கள் சாவை எதிர் நோக்கிக் காத்துக் கிடந்தனர். அரைப்பட்டினியோடு நாளைக் கடத்திவந்த சிலரும் நச்சுக் காய்ச்சலினால் பீடிக்கப் பட்டு உயிர் துறந்தனர்.
 இவ்வாறு அயர்லாந்தில் பெரும் பஞ்சம் ஏற்பட்டிருந்த காலத்தில் அமெரிக்கக் குடியேற்றம் மிக விரைவாக நடந்து வந்தது. உயிரோடு போராடிக் கொண்டிருந்த அயர்லாந்து மக்கள் சிக்கனமாக மீத்து வைத்திருந்த சிறு தொகைகளைத் திரட்டி எடுத்துக்கொண்டு குடும்பம் குடும்பமாகக் கப்பலேறி அமெரிக்காவுக்குப் புறப்பட்டனர். 
 கென்னடியின் முன்னோர்கள், தென்கிழக்கு அயர் லாந்தில் நேரோ ஆற்றங்கரையில் உள்ள நியூராஸ் நகரத் தைச் சேர்ந்தவர்கள் ; தொழுதுண்டு வாழும் தொழிலை வெறுத்து, உழுதுண்டு வாழ்ந்த உயர் மக்கள். மண்ணில் உழைத்துப் பொன்னைத் தேடியவர்கள். இக் கெ ன் னடி குடும்பத்தைச் சேர்ந்த பாட்ரிக் கென்னடி என்ற இளைஞர் ஒருநாள் வீட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார். பசி தாங்க முடியாமல் ஆதரவற்ற நிலையில் அவர் தம்மை மறந்து நடந்து கொண்டிருந்தார். பெரிய கூட்டமொன்று நியூராசை விட்டுக் கிளம்பிக் கொண்டிருந்தது. இளைஞர் பாட்ரிக் தம் சட்டைப்    பை யை த் தொட்டுப் பார்த்தார். தாம் நீண்டநாள் சேமித்து வைத்த நாணய முடிப்பு அதில் கிடந்தது. கூட்டம் விவர்ப்பூலை அடைந்தது. அமெரிக்கா