பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7


புறப்படுவதற்காக ஒரு கப்பல் அத்துறைமுகத்தில் நின்று கொண்டிருந்தது. அக்கூட்டத்தாரோடு சேர்ந்து நா மு ம் ஒரு பயணச் சீட்டு வாங்கிக்கொண்டார் பாட்ரிக். கப்பல் பாய்விரித்துப் புறப்பட்டது. பி ற ந் த பொன்னாட்டையும், தவழ்ந்து விளையாடிய இல் லத்தையும் அவர் மீண்டும் மிதிக்கவே இல்லை. ஜான்பிட் ஜெரால்டு கென்னடி மட்டும் காங் கிர ஸ் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஒர் ஐரோப்பியச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். தம் முன்னோரின் தாயகமான அயர்லாந்தைக் கா ணு ம் ஆவல் அவர் உள்ளத்தில் ஏற்பட்டது. அவர் நி யூ ரா ஸ் சென்று கென்னடி குடும்பத்தாரின் பழைய வீ ட் டை ப் பார்வையிட்டார்; அங்கு வாழ்ந்த கென்னடி குடும்பத்தாரி டம் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார். ஏழை உழவர் களாக இருந்த அக்குடும்பத்தார் கென்னடியை அன்போடு வரவேற்று உபசரித்தனர்.

✽ ✽ ✽