பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



3. வாழ்க்கைப் போராட்டம்

பாட்ரிக் கென்னடி ஏறிவந்த கி யூ னா ர டு கப்பல் பாஸ்டனிலுள்ள நீ டி ல் சு என்ற தீவை வந்தடைந்தது. அத்தீவில் பெரிய கப்பல் கம்பெனியின் கிடங்கு ஒன்றிருந் தது. இந்த இடம் மிகவும் சுறுசுறுப்பான ஒரு சிறிய நகரம். கப்பல்கள் அடிக்கடி இத்தீவை வந்தடைந்து கொண்டிருந் தன. நூற்றுக்கணக்கான சிறிய ப ட கு க ள் போவதும் வருவதுமாக இருந்தன. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக் கான வந்தேறிகளை அப்படகுகள் சுமந்து கொண்டு வந்து தீவில் இறக்கின. வெளிநாடுகளிலிருந்து வெறுங்கையோடு அங்கு வந்து குவிந்த வந்தேறிகளுக்கு வயிற்றுப் போராட் டம் பெரும் பாடாக இருந்தது. க ப் ப ல் தளங்களிலோ, பொருள்களை ஏற்றி இறக்கும் இடங்களிலோ வேலை செய்ய லாம். ஆனால் புற்றீசல்போல் நாள்தோறும் வந்து குவிந்து வரும் பல்லாயிரக்கணக்கான ம க் க ளு க் கு அச்சிறு தீவு எவ்வாறு வேலை கொடுத்து ஆதரிக்க முடியும் ? பசியோடும் பட்டினியோடும் போராடித் தாய்நாட்டை விட்டு வ ந் த ஏழை மக்க ளு க் கு எதிரில் வேலையில்லாத் திண்டாட்டம் என்னும் பெரும் பூதம் தன் கோரைப் பற்களைக் காட்டிக் கொண்டு அங்காத்த வாயோடு நின்றது.

 உழவுத் தொழிலையன்றி வேறொன்றும் அ றி யா த பாட்ரிக் செய்வதறியாது திகைத்தார். இயந்திரத் தொழில் அவருக்குப் பழக்கமில்லாத ஒன்று. முதலில் அ வ ரு க் கு வாழ்க்கை பெருந்துன்பமாகத் தான் இருந்தது. நாளடைவில் அவ்வியந்திர வாழ்க்கையோடு தம்மை இனத்துக்கொண் டார். உழவுத் தொழி லை விட இயந்திரத் தொழில் நல்ல வருவாய் உள்ளதாக இருந்தது. ஆ  னா ல், நாள்தோறும் பதினைந்து மணி நேரம் உழைக்கவேண்டியிருந்தது.