பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10


கைம்பெண்ணான இவர் தாயார், ஒரு க டை யி ல் வேலை செய்து தம் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

 தம் தாயின் நிலை கண்டு வருந்திய பாட்ரிக் ஜே. கென்னடி இளமையிலேயே பள்ளிப் படிப்பைத் துறந்து விட்டு உழைப்பாளியாகி விட்டார். மதுபான வாணிகத்தில் இவர் கவனம் சென்றது. கிழக்குப் பாஸ்டனில் க ப் ப ல் துறைக்கெதிரில் சிறிய மதுக்கடை ஒன்றைத் திறந்தார். கப்பல் தளத்தில் பணி முடித்துக் களைப்போடு திரும்பும் தொழிலாளர் பலர் இவருடைய கடைக்கு வந்து மதுவருந்தத் தொடங்கினர். நாளடைவில் வா ணி க ம் பெருகியது. நடுத்தர மக்கள் நிலையைக் கடந்து சிறிது செல்வம் சேர்க் கும் வாய்ப்பு இவருக்கு ஏற்பட்டது.
 பாட்ரிக் ஜே. கென்னடி பருத்த உடலும் உயர்ந்த தோற்றமும் வாய்க்கப் பெற்றவர். முறுக்கிவிட்ட மீசை இவர் முகத்தை அழகு செய்யும். எல்லாரிடத்திலும், இவர் சரளமாகப் பேசிப் பழகும் ப ண் பு  ள் ள வர். இன்சொல் இ வ ரு க் கு வாய்த்த பிறவிக் கொடை. இவர் மெல்லப் பேசும் அடக்கமும், கண்டிப்பான நற்பழக்கங்களும் உடை யவர் ; பிறருக்கு மது  வை வழங்குவாரேயன்றித் தாம் அதை நாவால் தீண்டமாட்டார். குறைந்த கல்வியறிவுடை யவர் என்றாலும், படிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டினார். இவர்பால் பொருந்தியிருந்த இத்தகு அரும் பண்புகளால், பா ஸ் ட ன் பகுதியில் வாழ்ந்த மக்களை இவர் பெரிதும் கவர்ந்தார். சமூகத்தில் இவருக்கு நிலையான மதிப்பு ஏற்படத் தொடங்கியது. இவரும் தமது செல்வாக்கை விரிவுபடுத்திக் கொண்டார். தொடர்ந்தாற் போல் ஐந்து முறை மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் நின்று வெற்றிபெற்றார். பின்னர் மாநில மேல்சபை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக் கப்பட்டார். இவருடைய மூத்த மகனே ஜோசப் பாட்ரிக் கென்னடி என்பவர்.

⚫ ⚫ ⚫