பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



4. செல்வச் சிறப்பு

    பாஸ்டன் பகுதியில் கு றி ப் பி ட த் த க் க மற்ரறொரு செல்வர் ஜான் எப். பிட் ஜெரால்டு என்பவர். இவரும் ஐரிஷ் கத்தோலிக்கர் ; பொது வாழ்விலும் அரசியல் வாழ்விலும் நல்ல ஈ டு பா டு கொண்டவர். கடற் சுங்கத் துறையில் எழுத்தராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கிப் படிப்படியாக முன்னேறி நாட்டுத் தன்னாட்சி மன்ற உறுப்பினர், மாநக ராட்சி மன்றச் சிறப்புறுப்பினர், மாநிலச் சட்ட உறுப்பினர் அமெரிக்க பாராளுமன்றக் காங்கிரஸ் உறுப்பினர் முதலிய மதிப்பான பதவிகளை வகித்து இறுதியில் பாஸ்டன் நகர மேயரும் ஆனார்.
    இச் சமயத்தில் ஜோசப் பாட்ரிக் கென்னடி, ஹார் வார்டு கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்று, ஒரு வங்கியின் அதிபராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். கி. பி. 1914 ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் ஜோசப் பாட்ரிக் கென்னடிக்கும், பிட் ஜெரால்டின் மகளான சோ சி க்கும் திருமணம் நடைபெற்றது.
    ஜோசப் பாட்ரிக் கென்னடி அயராத உழைப்பும், நுண்ணறிவும் வாய்க்கப் பெற்றவர். இவர் சிறுவராக இருந்தபோது குடும்பம் வறுமை நிலையில்தான் இருந்தது. அப்போது இவருக்கு வயது ஏழு. அப்பிஞ்சுப் பருவத்தில் இவர் பாஸ்டன் உல்லாசப் படகுகளில் பட்டாணிக் கடலையும் சாக்லேட் கட்டியும் விற்றுக் குடும்பத்திற்குத் துணையாக இருந்திருக்கிறார். இவர் கல்லூரியில் படித்த காலத்தில் ஒரு கோடை விடுமுறையின் போது ஊர்க் காட்சிகளைப் பார்க் கும் பேருந்து வண்டியொன்றை ஓட்டிப் பல ஆ யி ர ம் டாலர்களைச் சம்பாதித்தார்; தமது முப்பத்தைந்தாவது வயதிற்குள் ஒரு மில்லியன் டாலர் சம்பாதிக்க வேண்டு