பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12


மென்று உறுதி பூண்டிருந்தார் ; அவ்வுறுதியின்படி சம்பா தித்தும் விட்டார் ; ஒரு மில்லியன் டாலர் மட்டுமல்ல பல மில்லியன் டாலர்கள் சம்பாதித்தார்.

    இவருடைய உழைப்பு ஈடு இணையற்றது. கிழக்குப் பாஸ்டனில் இ வ ரு  டை ய குடும்பத்தார்க்கு ஒரு பகுதி சொந்தமான வங்கியொன்று இருந்தது. இவ்வங்கி இழப்பில் நடந்து கொண்டிருந்த காரணத்தால், மற்றொரு பெரிய வங்கியுடன் இணையும் நிலையில் இருந்தது. உடனே ஜோசப் பாட்ரிக் கென்னடி சிறிது மூலதனம் திரட்டித் தம் குடும்பத் தார் துணையுடன் அவ்வங்கியின் அதிபர் ஆனார். அப்போது இவருடைய வயது இருபத்தைந்து தான். அ மெ ரி க் க நாட் டி லேயே இவ்வளவு இளம் வயதில் இப்பதவியை வகித்தவர் இவர் ஒருவரே.
    சில ஆண்டுகள் கழித்து ஜோசப் வங்கித் தலைவர் பதவியை விட்டு விட்டுப் பெரிய கப்பல் கட்டும் துறை யொன்றின் நிர்வாகியானார். அதில் சிறிதுகாலம் பணியாற்றி விட்டு ஸ்டோன் அண்டு கம்பெனி என்ற பெரிய முதலீட்டு வங்கியின் தலைவரானார். பாஸ்டன் நகரில் மிகப் பெரிய வங்கி அதுதான். அது யாங்கிகளின் ஆதிக்கத்தில் இருந் தது. அதில் எப்படியோ ஜோசப் நு  ழை ந் து விட்டார். ஆனால், இதை யாங்கி முதலாளிகளில் பலர் விரும்பவில்லை. ஜோசப்பிற்கு எதிர்ப்புகள் வளரத் தொடங்கின. ஜோசப் சிந்திக்கத் தொடங்கினார் ; பாஸ்டனில் யாங் கி க ளின் ஆதிக்கம் இருக்கும் வரையில் ஐரிஷ் கத்தோலிக்கர்கள் பொருளாதாரத் துறையிலோ அரசியல் துறையிலோ சிறப் பான முன்னேற்றம் அடைய முடியாது என்பதைத் தெளி வாக உணர்ந்தார். எனவே பாஸ்டனை விட்டு வெளியேற ஜோசப் முடிவு செய்தார்.
    பாஸ்டன் நகரை எல்லையாகக் கொண்டு வளர்ந்த வாணிகம் இப்போது பெருத்த அளவில் விரிவு பெற்றது. ஜோசப் தமது தொழில் நிறுவனங்களை நியூயார்க்கிற்கும்