பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13


ஹாலிவுட்டிற்கும் மாற்றனார். ஜோசப் கென்னடி தம் கவனத்தைத் திரைப்படத் தொழிலிலும் திருப்பினார். பல தி ரை ப் பட நிறுவனங்களைத் தம் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டுவந்து, அவற்றை மாற்றியமைத்துப் பேரளவு ஆதாயத்துக்கு விற்றார்.

    பொருளாதாரத் துறையில் ஜோசப் கென்னடி தாம் எதிர்பார்த்த அளவுக்குமேல் பெரிய வெ ற் றி பெற்றார். அடுத்தாற்போல் அவருடைய கவனம் அரசியல் துறையின் பால் சென்றது. அவருக்கு இளமையிலிருந்தே ஜனநாயகக் கட்சி (Democratic Party) யின்பால் பி டி ப் பு உண்டு. கி. பி. 1936 இல் பிராங்க்வின் டி. ரூஸ்வெல்ட் அமெரிக்க நாட்டுத் தலைவராக விளங்கினார். அவருடைய கொள்கை களை ஆதரித்து, " நான் ரூஸ்வெல்ட்டை ஆதரிக்கிறேன் ." என்ற பெயரில் ஜோசப் கென்னடி ஒரு நூல் எழுதி வெளி யிட்டார். அந்நூலில் ரூஸ்வெல்ட்டின் புதுமுறைக் கொள்கை களை ஆதரித்து அமெரிக்கப் பொருளாதாரத்தை ஆட்டிப் படைக்கும் பெரிய பண முதலாகளின் நன்றியற்ற போக் கைத் தம் சொல்லம்புகளால் துளைத்து எடுத்துவிட்டார் ; அவர்களைத் தாக்குவதற்கென்றே " சலுகை பெற்ற பெரிய மனிதர்கள் ”, “ நன்றியற்ற பணக்காரர்கள் " என்ற பல புதிய சொற்ரறொடர்களை உருவாக்கினார். இச்சொற்களைப் படித்த பணக்காரர்கள் பலர் மிகவும் உள்ளம் புண்பட்டனர். இளமையில் யாங்கி முதலாளிகள் தமக்குக் கொடுத்த தொல்லைகளை உள்ளத்தே வைத்துக் கொண்டு சரியானபடி பழி வாங்கிவிட்டார் ஜோசப் கென்னடி.
    ரூஸ்வெல்ட் இவரைப் பங்குப் பத்திரங்கள் வழங்கும் குழுவின் தலைவராகவும், பின்னர்க் கடல்துறை நிர்வாகக் குழுவின் தலைவராகவும் அமர்த்தினார். ஒரு கத்தோலிக்கர் இ வ் வுயர் ப த வி க ளி ல் அமர்த்தப் பட்டதைக் கண்ட அமெரிக்க முதலாளிகள் வியப்பில் ஆழ்ந்தனர். இறுதியில் ஜோசப் கென்னடி பி ரி ட் ட னி ன் தூதராகவும் ஆக்கப் பட்டார்.