பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17


அவர் அடிக்கடி மறந்து விடுவார்" என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

    ஜான் சிறந்த எழுத்தாளர் என்பதையும், சிறந்த பேச்சாளர் என்பதையும் உலகம் நன்கு அறியும். ஆனால் அவருடைய சொற்பொழிவைப் பற்றிக் குறிப்பிடும்போது, "அவருடைய பேச்சில் வெற்று அலங்காரங்களோ, கேட் போரை மலைக்கவைக்கும் சொல்லடுக்குகளோ, கிடையா. வீணாக ஒரு சொல்லைக்கூடத் தவறியும் தம் பேச்சில் பயன் படுத்தமாட்டார். தம் கொள்கைக்கு ஆக்கம் தேடும் தடைவிடைகளும் விளக்கங்களுமே அவர் பேச்சில் காணப் படும்" என்று அமெரிக்க அறிஞர்கள் கூறுகின்றனர். ஜான் இளமையிலிருந்தே அவ்வாறு பழகிவிட்டார். ஒரு சிறிய கருத்தை வெளியிடும்போது காரண காரியங்களைப் பிறர் உள்ளம் கொள்ளுமாறு விளக்கி எடுத்துக் கூறுவதே அவர் வழக்கம். அவர் பள்ளியில் பயின்ற காலத்தில், தமக்குக் கொடுத்த செலவுத் தொகை போதவில்லை என்ப தைத் தந்தைக்கு எடுத்துக் காட்டி மிகுதியான தொகை கேட்க விரும்பினார். அமெரிக்கச் சமூக உரிமைக் (American Civil Right) கொள்கையின் இன்றியமையாமையைப் பாராளு மன்றத்தில் எடுத்துக் கூறும்போது எவ்வாறு காரண காரியங் களை எடுத்துக் கூறினாரோ, அதேபோலத் தந்தைக்கெழுதிய கடிதத்திலும் காரண காரியங்களை எடுத்துக் கூறியிருந்தார். அக்கடிதம் பின்வருமாறு:
    "இப்போது என் செலவுக்காக நாற்பது செண்டு கொடுக்கப்படுகிறது. இதை வான ஊர்தியின் பொருட்டும், மற்றப் பிள்ளைப்பருவ விளையாட்டுக்களுக்காகவும் பயன் படுத்தினேன். நான் இப்பொழுது ஒரு சாரணச் சிறுவன் இனி நான் உணவு வைத்துக்கொள்ளும் பெட்டிகள், தோளில் மாட்டிக் கொள்ளும் பைகள், கம்பளிகள், விளக்குகள், மற்றும் பல ஆண்டுகளுக்குப் பயன்படக்கூடிய பொருள்கள் முதலிய வற்றை வாங்கவேண்டியிருக்கிறது. இந்தப் பொருள்களை 

கெ-4