பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18


யெல்லாம் வாங்கி, எ ன க் கு வேண்டியவற்றையும் கவனித்துக் கொள்வதற்கு எனக்கு மேற்கொண்டு முப்பது செண்டுகள் தேவைப்படுகின்றன. எனவே எனது நியாய மான வேண்டுகோளை ஏற்று நான் கேட்கும் பணத்தைக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்...??

    ஒருமுறை அவர் தம்முடைய பொறுப்புணர்ச்சியை உணர்ந்து தமது தந்தைக்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதம் பின்வருமாறு:
    "அசட்டுத்தனமாகச் சுற்றித் திரிவதை நிறுத்திவிடுவ தென்று உறுதியோடு முடிவு செய்துவிட்டேன். நான் இங்கிலாந்துக்குச் செல்லவேண்டுமானால், இந்த ஆண்டு என் படிப்பை வெற்றிகரமாக முடிப்பது எவ்வளவு இன்றியமை யாதது என்பதை நான் உணருகிறேன். நான் மிக முயற்சி யோடு படிப்பதாக என்னை இவ்வளவு நாட்களாக நானே ஏமாற்றிக் கொண்டிருந்தேன் என்பதை உண்மையாகவே உணருகிறேன்..." 
    இக்கடிதத்தைப் படித்த ஜோசப் கென்னடி ஜானுக்கு மறுகடிதம் எழுதினார். தம் மகனுடைய முன்னேற்றத்தில் அக்கறையும், பொறுப்புணர்ச்சியும் கொண்ட ஒரு தந்தை எவ்வாறு கடிதம் எழுதுவார் என்பதற்கு அக்கடிதம் சிறந்த எடுத்துக்காட்டாகும். அக்கடிதம் பின்வருமாறு:

அன்புள்ள ஜாக் !

    நான் ஏதோ நச்சரிப்பவன் என்று நினைக்கக்கூடாது. மக்களை எடைபோடுவதில் எனக்கு நல்ல பட்டறிவு உண்டு. உன்னிடம் ஆற்றலும் அறிவும் இருக்கின்றன. நீ சிறப்பான முன்னேற்றத்தை அடைவாய் என்பது எனக்கு நன்கு தெரி யும். உன்னிடமுள்ள ஆற்றல்களையும் பண்புகளையும் நீ பயன் படுத்திக் கொள்ளவேண்டும் என்று நான் வற்புறுத்தா விட்டால், ஒரு நண்பன் கூடச் சொல்லக் கூடியதை நான் சொல்லத் தவறியவனாவேன். நான் உன்னிடம் மிகவும் அதிக மாக எதிர்பார்க்கவில்லை. நீ சிறந்த மேதையாக மலர்ச்சி