பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19


பெறாவிட்டால் நான் ஏமாற்றமடைய மாட்டேன். ஆனால் நல்ல தெளிவும், எதையும் நன்கு சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்த்து முடிவு செய்யும் ஆற்றலும் உள்ள, பய்னுடைய குடிமகனாக நீ விளங்க முடியுமென்றே நான் நினைக்கிறேன்.

    மேற்கண்ட கடிதங்களைப் படிக்கும்போது, ஜோசப் கென்னடி தம் மக்களை 'அறிவறிந்த மக்களாக' வளர்ப்ப தற்கு எவ்வளவு முயற்சி எடுத்துக் கொண்டார் என்பது விளங்கும். சாப்பாட்டு நேரத்தில் ஜோசப் தம் மக்களை யெல்லாம் ஒன்று கூட்டி உணவருந்துவது வழக்கம். அப்போது அரசியல், சமூகம், கலை, விளையாட்டு ஆகிய பலவற்றைப் பற்றிச் சி ற ப் பா ன உரையாடல்கள் நடைபெறும். மக்களின் உள் ள வளர் ச் சி க்கு இவ்வுரையாடல்கள் பெரிதும் துணைபுரிந்தன. 
    பள்ளிப் பருவத்தில் ஜானுக்குக் கல்வியைவிட விளை யாட்டுக்களிலும், போட்டிப் பந்தயங்களிலும் மிகுந்த ஆர்வம் இருந்தது. முப்பது வினாடிகளில் நாற்பத்தாறு மீட்டர் நீந்தி விடுவார். இந்நீச்சல் பயிற்சி, இவர் கப்பல் தலைவராக இருந்தபோது பல பேருடைய உயிரைக் காப்பதற்குப் பெருந்' துணை புரிந்தது. பள்ளி நேரமில்லாத பிறநேரங்களில் பெரும் பாலும் இவரை விளையாட்டு வெளிகளில்தான் காணமுடியும்.
    சில பெற்றோர்கள் ஓர் எல்லக்குள் நிறுத்தி மிகக் கட்டுப்பாட்டுடனும், கண்டிப்புடனும் வளர்க்கின்றனர். இச்சூழ்நிலையில் சில குழந்தைகளின் உள்ளம் ஆற்றலிழந்து போய்விடக்கூடும். இவ்வுண்மையை ந ன் கு ண ர் ந் த வர் ஜோசப் கென்னடி. தம் குழந்தைகளுக்கு வெளி உலகில் தொடர்பு இல்லாமல் செய்துவிடவேண்டும் என்று அவர் என்றும் விரும்பியதில்லை. உ ல க த் தி ல் வாழ்க்கைப் போராட்டம் எவ்வளவு கடுமையாக இருக்கிறது என்பதை, அவர்களும் தெரிந்து கொள்ளட்டுமே என்று நினைத்தார். எனவே வேளை நேரும் போதெல்லாம் உலகியல் அறிவை மக்களுக்கு ஊட்ட அவர் தவறியதே இல்லை.