பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



6. ஐரோப்பியப் பயணம்

    ஜான் தமது பதினெட்டாவது வயதில் பட்டம் பெற் றதும் பிரான்சு, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தார். ஜோசப் கென்னடி இச்சமயம் பிரிட்டனில் அமெரிக்கத் தூதுவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஜான் தமது தந்தையைக் காண்பதற்காக பிரிட்டன் சென்றார். அப்போது இலண்டன் பொருளாதாரப் பள்ளியில் ஹெரால்டு ஜே. லாஸ்கி என்பவர் பேராசிரியராக இருந்தார். இவர் உலகப் புகழ் பெற்ற பொருளாதார அறிஞர். இவரிடம் ஜான் பாடம் கேட்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
    ஜானுக்கு இளமையிலிருந்தே வரலாற்றுப் பாடத்தில் அளவு கடந்த பற்றுதல் இருந்தது. அதுவும் அரசியல் வாதிகளின் வாழ்க்கை வரலாறு என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும். அவர் கல்லூரியில் சேர்ந்தவுடன் தேசியம், பாசிசம், குடியேற்ற நாடுகளின் அரசியல் ஆகியவைகளைப் பற்றி ஊக்கத்துடன் கற்கத் தொடங்கினார். பிரிட்டனில் இருந்தபோது ஆங்கிலத் தொழிலாளர் கூட்டம், ஐரோப்பிய அகதிகள், காலனி நாடுகளிலிருந்து வந்த தீவிர வாதிகள், இந்திய நிர்வாக உயர் அதிகாரிகள் ஆகியோருடன் ஜான் கலந்து பழகினார். அவருக்கு அவர்களுடைய கருத்துக்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. இத்தகைய பட்டறிவுகளைத் தம் மகனுக்கு ஊட்டுவதில் ஜோசப் கென்னடியும் பேரூக்கம் காட்டினார்.
    பிரிட்டனில் சிறிது காலம் பொருளாதாரக் கல்வி பயின்ற பின் ஜான் அமெரிக்கா திரும்பனார். ஹார்வார்டு கல்லூரியில் அரசியல் தத்துவத்திற்கான 'ஆனர்சு' பட்டத் தைப் பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். இப்பட் டத்தைப் பெற சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரை எழுதவேண்டும்