பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21


    ஹார்வார்டு கல்லூரியில் முதல் ஆண்டுக் கல்விலயை ஜான் வெற்றிகரமாக முடித்த நேரத்தில் இரண்டாம் உலகப் போருக்கான முயற்சிகளில் ஐரோப்பாக் கண்டம் ஈடுபட் டிருந்தது. இக்கொந்தளிப்பை மன நிம்மதியின்றி ஜான் கவனித்துக் கொண்டிருந்தார். கல்லூரிப் பாடத்தில் அவர் உள்ளம் நிலைகொள்ளவில்லை; போர் நெருக்கடி குமுறிக் கொண்டிருக்கும் இடங்களை நேரில் பார்க்க வேண்டுமென்று விரும்பினார். ஹார்வார்டு கல்லூரி முதல்வரிடம் இசைவு பெற்றுக்கொண்டு ஜான் மீண்டும் ஐரோப்பியச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். த மது விருப்பத்தைப் பிரிட்டனிலிருந்த தமது தந்தைக்கும் தெரியப்படுத்தினார். ஜோசப் கென்னடி தம் மகனின் விருப்பத்திற்கு ஒப்புதல் தெரிவித்ததோடு, சுற்றுப் பயணத்தின் போது செல்லும் நாடுகளின் அரசியல் நிலையைப்பற்றி விரிவான அறிக்கைகளை எழுதியனுப்புமாறு பணித்தார்.
    இச்சுற்றுப் பயணத்தின்போது பிரான்சு, போலந்து, ரீகா, உரிசியா, துருக்கி, பாலஸ்தீனம், ஜெர்மனி, பால்கன் முதலிய நாடுகளை ஜான் பார்வையிட்டார்; அந்தந்த நாட்டு மக்களுடன் கலந்து பழகி அவர்களுடைய உள்ளங்களையும் ஆராய்ந்தார்; இப்பயணத்தில் பல சிறந்த அரசியல் வாதி களைச் சந்தித்து அவர்களுடன் தங்கி உரையாடும் வாய்ப்பும் பெற்றார். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பாரிசில் தூதராக இருந்த புல்லிட்டும், வார்சாவில் தூதராக இருந்த பிட்டலும், மாஸ்கோவில் இரண்டாவது செயலாளராக விருந்த சார்லஸ் போலனும் ஆவர்.
    ஜான் ஒவ்வொரு நாட்டுத் தலைநகரிலும் தங்கியிருந்த போது, விரிவான அறிக்கைகளைத் தயாரித்து இலண்டனி லிருந்த தமது தந்தைக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். இவரு டைய கட்டுரைகளில் இலக்கியச் சுவை இல்லை; வரிக்கு வரி நிதான உணர்ச்சியே புலப்பட்டது; தாம் எடுத்துக்கொண்ட