பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

கருத்துக்களை விருப்பு வெறுப்பில்லாமல் நடுநிலையிலிருந்து சீர்தூக்கிப் பார்த்து எழுதியிருந்தார்; பல நெருக்கடியான அரசியல் செய்திகளை வருணிக்கும் போது உணர்ச்சி வயப் படாமல் ஒதுங்கி நின்று எழுதியிருந்தார்; ஜனநாயகத்தின் வலிவற்ற தன்மையையும், ஆங்கிலப் பேரரசின். அலட்சிய மனப்பான்மையையும் மிகஅழகாகத் தெளிவுபடுத்தியிருந்தார் இரண்டாம் உலகப் போர் எந்த உருவில் மூளும் என்று ஜான் தம்முடைய கட்டுரையில் கூறியிருந்தாரோ, அதே உருவில் குறிப்பிட்ட காலத்தில் மூண்டது. போண்ரப்பற்றி இவர் குறிப்பிட்டிருந்த கருத்துக்களில் பெரும் பகுதி உண்மையாயிற்று.

தம் சுற்றுப் பயனத்தின் போது தாம் எழுதிய கட்டுரைகளேயே ஒழுங்குபடுத்தி ஜான் ஆராய்ச்சிப் பட்டம் பெறுவதற்காகக் கல்லூரிக்கு அனுப்பினர். இக்கட்டுரைகள் பேராசிரியர்களுக்கு மிகவும் பிடித்திருந்தன. ஜானின் அரசியல் தீர்க்கதரிசனத்தை அவர்கள் மிகவும் பாராட்டினர்.

ஜான் எழுதிய கட்டுரைகளைப் படித்து சுவைத்த ஜோசப் கென்னடி அளவற்ற பெருமகிழ்ச்சி கொண்டார்; தம் மகனுடைய அறிவாற்றலை வியந்து பாராட்டினர் சிறப்பான எதிர்காலம் தம் மகனுக்குக் காத்திருக்கிறது. என்று அவர் உள்ளம் நினைக்கத் தொடங்கியது.

‘அன்பிற்குரிய ஜான்!

உன் ஆற்றலைப்பற்றி எனக்குத் தெரியும். நீ திறமை மிக்கவன்; சிறப்பான மகன்...' என்று ஜோசப் கெர் னடி கடிதம் எழுதியிருந்தார். அறிவறிந்த ஒரு மகனே பெறு வதைவிடப் பேரின்பம் ஒரு தந்தைக்கு என்ன இருக்க முடியும்?

தம்முடைய ஆராய்ச்சிக் கட்டுரைக்கு ஹார்வார்டு

கல்லூரியில் நல்ல வரவேற்புக் கிடைத்ததை அறிந்த ஜான் அக்கட்டுரைகளை நூலாக வெளியிட விரும்பினர். வில்பிரட்