பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. போர் வீரர் கென்னடி

கல்லூரியை விட்டு வெளிக் கிளம்பிய கட்டினங் காளையான ஜான் தாமும் போரில் நேரடியாக பங்கு கொள்ள விரும்பிளுர்; எனவே இராணுவத்தில் சேர்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். ஜானின் முதுகெலும்பு இதற்கு முன்னரே பழுதுபட்டிருந்தது. முதுகில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக, இராணுவத்தில் சேர்வதற்காக அவர் போட்டிருந்த விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது ஜானுக்கு இது பெருத்த ஏமாற்றமாக இருந்தது. முயற்சி யுடையார் இகழ்ச்சியடையாரன்ருே? ஜான் எவ்வாறேனும் இராணுவத்தில் சேர்வதென முடிவு செய்தார்.

மருத்துவர்களையும் உடற்பயிற்சி வல்லுநர்களையும் கலந்து ஜான் ஆலோசனை செய்தார். தொடர்ந்து ஐந்து திங்கள்கள் உடற்பயிற்சி செய்து தம் உடலை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். எதிர்பார்த்தபடி அவருடைய உடல் வலிமையும் வனப்பும் பெற்றது. மீண்டும் இராணுவத்தில் சேர்வதற்காக விண்ணப்பம் செய்தார். இம்முறை அவர் எவ்வித மறுப்புமின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடற் படைத் தகுதித் தேர்விலும் முதல்தரமான வெற்றி பெற்றர். ஜான் கென்னடி கடற்படை வீரர் கென்னடி ஆர்ை.

இரண்டாம் உலகப் போர் மிகவும் தீவிரமாக நடை பெற்றுக் கொண்டிருந்தது ஜப்பானியர்கள் பெர்ல் துறை முகத்தின் மீது திடீர்த் தாக்குதல் நடத்தினர். ஜான் போரில் பங்குகொள்ள வேண்டும் என்ற தமது விருப்பத்தை மேலதி காரிகளுக்குத் தெரியப்படுத்தினர். மேலதிகாரிகளும் அவர் விருப்பத்திற்கு இணங்கினர். கி. பி. 1943 ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஜான், சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து தெற்குப் பசிபிக்கிற்குப் புறப்பட்டார். அங்குதான் நேச நாட்டுப் ப ைட க ள் ஜப்பானியர்களைப் பின்னடையச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தன.