பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25


அவ்வாண்டு ஆகஸ்டுத் திங்கள் இரண்டாம் நாள் நள்ளிரவில், பி டி. 109 என்ற கண்காணிப்புப் போர்ப் படகு ஒன்று ஜியார்ஜியாவிற்கு மேற்கே சுற்றிக் கொண் 4-ருந்தது. அது அமெரிக்கக் கப்பற்படையைச் சேர்ந்தது. அதன் தலைமைப் பொறுப்பை லெப்டினெண்ட் ஜான் கென்னடி ஏற்றிருந்தார். எதிர்பாராத விதமாக ஜப்பானிய நாசகாரிக் கப்பல் ஒன்று அப்பக்கமாக வந்தது. அமெரிக்கப் படகைக் கண்டதும் அந்நாசகாரி மிக வேகமாகப் பாய்ந்து வந்தது. - - நாசகாரிக் கப்பல் விரைந்து வருவதைப் படகுத் தலைவரான ஜான் கண்டார். ஆனல் சிறிய படகை வைத்துக் கொண்டு பெரிய நாசகாரிக்கப்பலே எதிர்த்து நிற்க முடியுமா? மண்ணுங்கட்டி மலையை எதிர்த்துப் போராட முடியுமா ? ஜான் கென்னடி செய்வதறியாமல் திகைத்தார். நாசகாரி யின் எதிர்பாராத தாக்குதலுக்கு ஆற்ருத அமெரிக்கப் படகு, கண்மூடி விழிப்பதற்குள் இரண்டு துண்டாகிவிட்டது. இரு துண்டுகளும் கடலில் தீப்பற்றி எரியத் தொடங்கின.

படகு உடைந்ததும் இரு வர் உடனே மாண்டனர். நாசகாரி மோதிய அதிர்ச்சியில் ஜான் மல்லாந்தவண்ணம் வீழ்ந்தார். முதுகில் பலமான அடிபட்டது. மரணம் வந்தால் இப்படித்தானிருக்கும் போலிருக்கிறது என்று அவர் எண்ணத் தொடங்கினர். ஒரு கணத்தில் அருமைப் பெற்றேரும், அன்பிற்குரிய உடன் பிறந்தாரும் அவர் உள்ளத்தில் தோன றி மறைந்தனர். மெதுவாகச் ச மாளித் து எழுந்து நின்ருர் ஜான். படகிலிருந்து கடலில் வீழ்ந்த அதிகாரிகளும் மாலுமி களும் த ண் ணி ரி ல் எண்ணெய் எரிந்து கொண்டிருந்த இடத்துக்கு அப்பால் மிதப்பதற்குத் தத்தளித்துக் கொண் டிருந்தனர். இதற்குள் படகின் ஒரு பகுதி கடலுக்குள் மூழ்கி விட்டது. மற்ருெரு பகுதி மிதந்து கொண்டிருந்தது ஜானும், மற்றும் நா ல் வ ரு ம் அதைப் பற்றிக் கொண்டிருந்தனர். மூழ்காமல் வேறு யாராவது உயிருடன் இருக்கிறர்களா என்பதை அறிவதற்காக ஜான் கூப்பாடு போட்டுக் கேட்டார். கெ-4