பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26


மேலும் ஆறு பேர் பதிலுக்கு எதிரொலி கிளப்பினர். அவர் களே எல்லாம் மீட்கும் முயற்சியில் ஜான் ஈடுபட்டார்.

மக்மாகன் என்பவருக்கு உடலெல்லாம் நெருப்புக் காயம் ஏற்பட்டிருந்தது. ஆரில் என்ற மற்றெருவருக்குக் கர்லில் க டு ைம யான அடி ஏற்பட்டிருந்தது. கென்னடி அவர்கள் இருக்குமிடம் நீந்திச் சென்ருர் ; அவர்களே மெல்லப் படகுக்குக் கொண் டு வ ந் து சேர்த்தார். ஆரிஸ் வலி பொறுக்க முடியாமல் துடித்தார். உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கை அவர் உள்ளத்திலிருந்து நீங்கியது.

இத்துன்பச் சுழலில் உயிருக்கு மன்ருடிய மாலுமிகளைக் காப்பாற்றும் பொறுப்பு, தலைவரான ஜானுக்கு ஏற்பட்டது. ஒரு தலவனின் ஆற்றல் இது போன்ற துன்பக் காலங்களில் தான் வெளிப்படும். ஜான், தாம் ஓர் இணையற்ற தலைவன் என்பதை அவ்வமயம் மெய்ப்பித்துக் காட்டினர். படகு உடைந்தவுடன் தாம் எவ்வாறு உயிர் பிழைப்பது என்பதைப் பற்றி ஜான் சிந்திக்கவில்லை; த ம் ைம ச் சார்ந்தவர்களே எவ்வாறு காப்பாற்றுவது என்பதிலேயே கண்ணுங் கருத்து மாக இருந்தார். ஆரிஸ் உயிருக்கு பயந்து அலறித் துடித்த போது, பாஸ்டன் வீரனுகிய நீ இவ்வாறு அஞ்சுவதா? உன் கோழைத்தனத்தைக் க ண் டு வெட்கப்படுகிறேன் ?? என்று கூறினர்.

பொழுது புலர்ந்தது. உடைந்த படகில் தொற்றிக் கொண்டிருந்த பதினெரு வீரர்களும் உ த வி க்கு வேறு ஏதேனும் படகு வருமா ? என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தனர் யாது காரணத்தாலோ படகு எதுவும் வரவில்லை. சுற்றியிருந்த தீவுகளில் ஜப்பானியர்கள் இருந் தனர். இவர்கள் நம்பியிருந்த உடைந்த படகும் மூழ்கத் தொடங்கியது. எந்த நேரத்திலும் ஜப்பானியர்களின் படகு அவ்வழியாக வரக்கூடும்.

  • எதிரிகள் வந்தால் நாம் யாது செய்யலாம்? அவர் களோடு உயிருள்ளவரை போராடலாமா? அல்லது சரண டைந்து விடலாமா?’ என்று ஜான் தமது நண்பர்களைக்