பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27


கேட்டார். ஜான் ! நீர்தாம் எமது தலைவர். நீர் என்ன மு. டி வு செய்கிறீரோ, அ ம் மு. டி ைவ நாங்களும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிருேம்? என்று த ண் பர் க ள் விடையிறுத்தனர்.

இவ்வாறு உ ைர யா டி க் கொண்டிருந்தபொழுது, இவர்கள் தொற்றிக் கொண்டிருந்த படகு மூழ்கிவிட்டது. இனிக் கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பதில் எவ்விதப் பயனுமில்லை என்பதை உணர்ந்த ஜான், நண்பர்களுடன் நீந்திச் சென்று அருகிலுள்ள ஒரு தீவை அடைய விரும்பினர். படுகாயமடைந்து விட்ட மக்மாகனைச் சுமந்து செல்வது இவர்களுடைய கடமையாயிற்று. ஜான் மக்மாகனை முதுகில் ஏற்றிக்கொண்டு மெல்ல நீந்திச் சென்ருர், மற்ற நண்பர் களும் அவரைப் பின்தொடர்ந்தனர். தென் கிழக்கில் ஐந்து கி. மீட்டர் தொலைவில் தென்பட்ட ஒரு சிறு தீவை நோக்கி எல்லாரும் நீந்தினர். போகும்போது சுமை தாள முடியாமல் ஜான் நிறையக் கடல் நீரைக் குடித்தார். ஐந்து மணி நேரம் கடலோடு போராடி அத்தீவை அடைந்தனர். பதினேந்து மணி நேரம் எல்லாரும் கடல் நீரில் மிதந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமது நண்பர்களே அத்தீவில் விட்டுவிட்டு ஜான் மட்டும் பெர்கூசன் பாதைக் கருகில் உள்ள மற்றெரு தீவுக்கு நீந்திச் சென்ருர்; அப்பாதை வழியாகச் செல்லும் அமெரிக்கக் கண்காணிப்புப் படகுகளில் ஏதாவதொன்று கண்ணில் தட்டுப்படலாம் என்று எதிர்பார்த்தார்; ஆல்ை எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை. ஏமாற்றத்தோடும் கவலையோடும் ஜான் திரும்பி வந்தார்.

நண்பர்கள் தங்கியிருந்த தீவை நோக்கி அவர் நீந்தத் தொடங்கினர். களேப்பும், பசியும் அவரை மிகவும் வாட்டத் தொடங்கின. எதிர்பாராத விதமாக ஒரு நீர்ச் சுழலிலும் சிக்கிக்கொண்டார். நீரின் வேகம் அவரைத் திசை தெரி யாமல் இழுத்துச் சென்றது. நண்பர்கள் தங்கியிருந்த தீவை யும் கடந்து சென்றுவிட்டார். சிறிது சிறிதாக நினைவையும்