பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28


இழக்கத் தொடங்கினர். சிறுகச்சிறுக இறந்துகொண்டிருக் கிருேம் போலிருக்கிறது’ என்று ஜான் நினைக்கத் தொடங் கினர். இறுதியில் அந்நீரோட்டம் எப்படியோ அவரை நண்பர்கள் தங்கியிருந்த கரைக்கே கொண்டுவந்து சேர்த்து விட்டது. கரையில் ஒதுங்கிய ஜான் மெதுவாக மணலில் ஊர்ந்து செல்லத் தொடங்கினர். நண்பர்கள் எல்லாரும் அவரைக் கரையில் கண்டதும் ஓடி வந்து தூக்கினர். ஜான் மணலில் வ்ாந்தி எடுக்கத் தொடங்கினர்; தமது அருகில் நின்று கொண்டிருந்த மூன்ருவது அதிகாரியை நோக்கி 'இராஸ்! இன்று இரவு நீதான் முயற்சி செய்ய வேண்டும். எப்படியாவது கண்காணிப்புப் படகைக் கண்டு பிடித்தாக வேண்டும்?' என்று கூறிவிட்டு மயங்கி விழுந்தார். அமெரிக்கக் கப்பற் படைத் தளத்தில் இருந்தவர்கள், பி. டி. 109 படகில் இருந்த வீரர்கள் யாவரும் இறந்து விட்ட தாக எண்ணினர். இவர்களுடய ஆன்ம ஈடேற்றத்துக்காக இறைவணக்கமும் நடத்திவிட்டனர்.

அன்று மாலே இராஸ் பெர்கூசன் பாதைக்கு நீந்திச் சென்ருர்; நீண்ட நேரம் காத்திருந்தார். படகு எதுவும் கண்களுக்குப் புலப்படவில்லே. முதல் நாள் ஜானுக்கு ஏற் பட்ட பட்டறிவே இராசுக்கும் ஏற்பட்டது. மிகவும் அல்லல் பட்டுத் தீவுக்குத் திரும்பினர். இனி அத்தீவில் தங்கியிருப்ப தால் யாதொரு பயனுமில்லை. என்பதை உணர்ந்த ஜான் தமது நண்பர்களோடு பெர்கூசன் பாதைக்கருகிலிருந்த தீவை நோக்கி நீந்திச் சென்ருர். இத்தீவை அடைய மூன்று மணி நேரம் அவர்கள் அலைகளோடு போராடினர். இத்தீவில் தென்னைமரங்கள் நிறைய இருந்தன. இளநீரைப் பருகித் தங்கள் வேட்கையையும் பசியையும் அவர்கள் போக்கிக்கொண்டனர்.

அன்று நான்காவது நாள். எல்லாருடைய உடலும் உள்ளமும் மிகவும் சோர்ந்துவிட்டன. உயிரோடு தங்கள் கப்பற்படைத் தளத்தை அடைவோம் என்ற நம்பிக்கை அவர்களுக்குச் சிறிது சிறிதாக நீங்கிக்கொண்டிருந்தது.