பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29


மக்மாகனுடைய நெருப்புக் காயங்களிலிருந்து சீழ் வடியத் தொடங்கியது. முழுமூச்சோடு இறுதி முயற்சியில் ஈடுபட் டனர் ஜானும் இராசும். இருவரும் அருகிலிருந்த காருத் தீவுக்கு நீந்திச்சென்றனர். அப்பக்கத்தில் வாழும் சுதேசிகள் இருவர் அங்கிருந்தனர். ஜானேயும், இராசையும் கண்ட வுடன் அவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். ஜப்பானி யர்கள் விட்டுச் சென்ற சில உணவுப் பொருள்களும் படகு ஒன்றும் அங்குக் காணப்பட்டன. சிறிது நேரத்தில் வேறு சுதேசிகள் அங்கு வந்தனர். ஜான் அவர்களிடம் சிறிது நேரம் பேசி ந ட் பு ச் செய்துகொண்டார். பிறகு ஒரு தேங்காயின்மேல், “பதினெரு பேர் உயிருடனிருக்கிருேம். தாருத் தீவில் தங்கியிருக்கிருேம். நாங்கள் இருக்குமிடம் இத் தீவுக்காரர்களுக்குத் தெரியும்-கென்னடி” என்று ஜான் எழுதினர். அத் தேங்காய் மூடியை எடுத்துக் கொண்டு அச்சுதேசிகள் புறப்பட்டனர்.

ஜான் கண்காணிப்புப் படகைத் தேடும் முயற்சியில் மீண்டும் ஈடுபட்டார். இராசும் உடன் சென்ருர். இருவரும் படகில் ஏறிப் புறப்பட்டுப் .ெ பர் கூ ச ன் பாதையை அடைந்தனர். திடீரென்று காற்று பல மா. க வீசத் தொடங்கியது. ஏறிச்சென்ற படகும் கவிழ்ந்து விட்டது. இருவரும் இரண்டு மணி நேரம் கடலில் தத்தளித்த பிறகு எப்படியோ நாருத் தீவின் கரையில் வந்து ஒதுங்கினர். கையிலும் தோள்களிலும் இராசுக்கு நல்ல காயம். இருவரும் நாருத் தீவு மணலில் படுத்து நன்ருக உறங்கினர்.

கதிரவன் கீழைக்கடலில் தலை நீட்டித் தன் பொற் கதிர்களால் அலைகளின் மீது தங்கப்பாலம் எழுப்பின்ை. செய்திகொண்டு சென்ற சுதேசிகள் இவர்களே வந்து எழுப்பினர்.

“உங்களுக்கு ஒரு கடிதம் கொண்டு வந்திருக்கிருேம்” என்று அவர்கள் கூறினர்.