பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30


ஜான் அக்கடிதத்தைப் பிரித்துப் படித்துப் பார்த்தார். கியூஜிலந்துக் காலாட் படையின் தளபதி கியூஜார்ஜியா விலிருந்து அக்கடிதத்தை அவருக்கு எழுதியனுப்பியிருந்தார். அச் சுதேசிகளோடு தம்முடைய முகாமுக்கு வரும்படி அக் கடிதத்தில் அவர் வற்புறுத்தியிருந்தார். சுதேசிகள் ஜானத் தமது பட கு க் க டி யி ல் படுக்கவைத்துக் கொண்டு நியூஜிலந்துக்காரர்கள் தங்கியிருந்த இடத்திற்குப் படகைச் செலுத்தினர். சில மணி நேரத்திற்கெல்லாம் ஒரு மீட்சிப் படகும் வந்து சேர்ந்தது.

“ டேய் ! ஜான் !’ எ ன்று யாரோ பட கி லி ரு ந் து கூப்பிட்டார்கள். அவர்கள் வேறு யாருமல்லர். ஜானின் நண்பர்களே. ஜான் பட கி லி ரு ந் து குதித்தெழுந்தார். நண்பர்கள் அவரைக் கட்டித் தழுவிக் கொண்டனர். ஜானும் அ வ ரு ைட ய வீரர்களும் விரைவில் அமெரிக்கக் கப்பல் தளத்தை அடைந்தனர்.

தப்பிப் பிழைத்து வந்த ஜானின் வீர வரலாற்றைக் கேட்டு எல்லாரும் வியப்படைந்தனர். ேம ல தி கா ரி க ள் இவரைப் .ெ பரிதும் பாராட்டினர். பர்ப்பில் ஹார்ட் என்ற பட்டத்தையும், கடற்படை பதக்கத்தையும் கடற்படைத் துறையினர் இவருக்கு வழங் கி ச் சி ற ப் பு ச் செய்தனர். இவருக்கு வழங்கிய பாராட்டிதழில் பின்வருமாறு எழுதப் பட்டிருந்தது.

'இவருடைய அஞ்சாமையும், துன்பங்களைச் சகித்துக் கொள்ளும் ஆற்றலும், சிறப்பான தலைமையும் பல உயிர்களைக் காப்பதற்குப் பெருந்துணையாக விளங்கின. இவருடைய பண்புகள் அமெரிக்கக் கப்பற்படையில் உயர்ந்த மரபுக்கு அறிகுறியாக இருந்தன.”

米 ● 兴