பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34


ஹார்வார்டு கல்லூரியும், யாங்கிக் கிறித்தவக் குடும்பங்களும் இடம் பெற்றன. நகரங்களில் பணியாற்றிய நிர்வாகிகளும் இம் மூலையில் வாழ்ந்தனர்.

இத்தொகுதியில் ஜனநாயகக் கட் சி யி ன் சார்பில் சட்டமன்ற உறுப்பின (Congress member) ராக நிற்பதற்கு ஜான் முடிவு செய்தார். இத்தொகுதியில் பெல்வியூ என்ற விடுதியில் அ ைற க ள் எடுத்துக்கொண்டார். அரசியல் மேதையான பிட்ஸ் தாத்தாவும் இங்குத்தான் தங்கியிருந்தார். இருபத்தெட்டு வயதினரான இளம் கென்னடி, யாரிடமும் கலந்து பழகும் வழக்கமில்லாதவர் ; நடக்கும் கோல்போல் மெலிந்த உருவினர் ; தேனியைப்போல் சுறுசுறுப்பானவர். டெர்பித் தொப்பியும், அட்டகாசமான பேச்சும், தொந்தியும் தொப்பையுமான தோற்றமும் உடைய பாஸ்டன் அரசியல் வாதிகளுக்கு இவர் நேர்மாறனவர். இவ்வரசியல்வாதிகள் ஜான ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

மற்ற உறுப்பினர்கள் தேர்தல் வேலையில் இறங்கு வதற்கு முன்பாகவே ஜான் தமது தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டார். மு. த லி ல் இவரைக்கண்டு ம ற் ற உறுப்பினர்கள் சிரித்து ஏளனம் செய்தார்கள். " பாவம் ! பணக்காரப் பையன் ! உலகமறியாதவன் .ெ க ன் ன டி. குடும்பத்தின் பெயரையும், பணத்தையும் பயன் படுத்திக் கொண்டு உள்ளே நுழையப் பார்க்கிருன் " என்று எல்லாரும் பேசிக்கொண்டனர். ஆனல் உண்மையாக ஜான் தமது குடும்பப் பெயரையோ, பணத்தையோ நம்பி இப்பணியில் இறங்கவில்லை; தமது அயரா உழைப்பையே நம்பியிருந்தார்.

ஜான் மு. த லி ல் தமக்கென்று ஒரு கூட்டத்தைத் திரட்டத் தொடங்கினர். சோட் பள்ளியிலும், ஹார்வார்டு கல்லூரியிலும், கடற்படையிலும் உடனிருந்த நண்பர்களே இக்கூட்டத்தில் இருந்தனர். பி ற கு இவர்களின் துணை கொண்டு, ஜனநாயகக் கட்சியினர், லிபரல்கள், கன்சர்