பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


வாயில்

கதிரவன் நடுவானத்தில் திடீரென்று மறைவதைப்பார்த் திருக்கிறீர்களா ? ........ அமெரிக்காவில் பேரொளி வீசி வட்ட மிட்டுச் சுழன்று வந்த கென்னடி என்ற அரசியற் கதிரவன் திடீரென்று நடுவானில் மறைந்து விட்டான். நல்லோர் உள்ளத்திலெல்லாம் கவலை இருளை வீசி விட்டு மறைந்து விட்டான்.

கென்னடியின் சாவைக் கேட்ட உலக மக்கள் வடித்த கண்ணிரை ஒருமுகப் படுத்தியிருந்தால் அது காவிரியாகப் பாய்ந்திருக்கும். கென்னடியின் இறப்பை எண்ணி உலக மக்கள் விட்ட பெருமூச்சை ஒருமுகப்படுத்தியிருந்தால் அது பெரும் புயற்காற்றாக மாறியிருக்கும்.

கென்னடியின் வரலாறு ஒரு வீர வரலாறு தியாக வரலாறு : உள்ளத்தை உருக்கும் கண்ணீர்க் காதை.

இச்சிறு நூல் கென்னடியின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுகிறது; அவர் உணர்ச்சிகளை உங்கள் உள்ளத்தோடு பேச விடுகிறது ; அவர் உள்ளத்தில் முகிழ்த்த சொற்பொழிவுகளையும் மொழி பெயர்த்து உங்கள் முன் படைக்கிறது.

மனித உள்ளத்தோடு வாழ விரும்பும் ஒவ்வொருவரும் கென்னடியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். கென்னடி ! இது உள்ளக் கிளர்ச்சியூட்டும் ஒரு மந்திரச் சொல் ... வாழிய கென்னடியின் புகழ் !


கவிதைப் பண்ணை
15–6–64

முருகு