பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. பாராளுமன்ற உறுப்பினர்

வாஷிங்டனில் குடியேறிய நாள் முதற்கொண்டு கென்னடியின் எண்ணங்களும், விருப்பங்களும் வளர்ந்து கொண்டே இருந்தன. சட்ட மன்ற உறுப்பினராகவே தமது வாழ்நாளேக் கழிக்க அவர் விரும்பவில்லை. நாடு முழுவதற் குமான ஒரு பதவிக்குப் போட்டியிட முடியுமா ? என்று அவர் சிந்தித்துக் கொண்டிருந்தார். 1952 ஆம் ஆ ண் டி ன் முற்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் (Senator) ஹென்றி காபட் லாட்ஜின் பதவிக்காலம் முடியப்போகிறது என்பதைக் கென்னடி உணர்ந்தார்; லாட்ஜ் மீண்டும் தேர்தலுக்கு நிற்பார் என்பதையும் அறிந்தார். அத்தொகுதியில் நின்று போட்டியிடலாமா என்று கென்னடி எண்ணினர்.

மாசாசூசெட்ஸ் மாநிலத்தின் ஆளுநராக (Governor) இருந்த திருவாளர் டெவர் அவர்களும் பாராளுமன்ற உ று ப் பி ன ர் பதவிக்குப் போட்டியிடலாமா? என்று சிந்தித்துக் கொண்டிருந்தார். ஆனல் லாட்ஜின் வலிமையை எடைபோட்டு பார்த்துவிட்டு அவர் ஒதுங்கி விட்டார். ஆளுநர் டெவரின் அச்சத்தைக்கண்ட கென்னடி உளம் தளர்ந்து விடவில்லை. 1952-ம் ஆண்டு ஏப்ரலில், "மாசா சூசெட்டிலிருந்து அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஹென்றி காபட் லாட்ஜை ஜூனியர்) எதிர்த்து நான் போட்டியிடப் போகிறேன்? என்று .ெ க ன் ன டி. அறிக்கை வெளியிட்டார்.

கென்னடியின் அறிக்கையைப் படித்த நண்பர் பலர் திகைத்துப் போய்விட்டனர். காபட் லாட்ஜை வெற்றி கொள்வதென்பது அவ்வளவு எளிதான செயலன்று. லாட்ஜ் தேர்தல் கலையில் வல்லுநர் பிரசாரத்தில் கைதேர்ந்தவர்; i சொல் வல்லர்; சோர்விலர்; அஞ்சாதவர்; மாசாசூசெட்ஸ்