பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45


அலுவலகத்திலிருந்து வெளியேறினர். புகழ்பெற்ற மேல் சபை உறுப்பினரான ஹென்றி காபட் லாட்ஜை 70,000 வ க் கு க ள் மிகுதியாகப்பெற்று, ஜான் பிட்ஜெரால்டு கென்னடி தோற்கடித்தார். புகழ்பெற்ற இவ்வெற்றியைக் கொண்டாட, பிட்ஸ் தாத்தா உயிருடன்ருக்கவில்லை. அவர் உயிருடன் இருந்திருந்தால், அளவுக்கு மீறிய மகிழ்ச்சியை அடைந்திருப்பார். காரணம் காபட் லாட்ஜ் சீனியரிடம் போட்டியிட்டு பாராளுமன்றத் தேர்தலில் அவர் தோல்வி யடைந்திருக்கிருர்.

வாஷிங்டனுக்கும் செனட் அலுவலகத்திற்குமிடையே தனிப்பட்ட பாதாள வண்டித் தொடர் ஒன்று ஓடுகிறது. அவ்வண்டியில் ஏறுவதற்காகக் கென்னடி காலே வைத்தார். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த காவலாளி அவரைத் தடுத்துக் கொஞ்சம் பொறுங்களேயா! பாராளுமன்ற உறுப் பினர்கள் முதலில் வண்டியேறட்டும்!” என்று கூறினன்.

'என்ன?’ என்று கூறி நிமிர்ந்து பார்த்தார் கென்னடி. கென்னடியின் மு.க த் ைத க் கூர்ந்து பார்த்த காவலாளி அச்சத்தால் அதிர்ந்து போய்விட்டான். மன்னித்துக் கொள்ளுங்களேயா ! தங்களே இன்னர் என்று அறியாமல் சொல்லிவிட்டேன்!? உன்று தாழ்மையுடன் கூறினன் அக் காவலாளி. கென்னடி கல்லூரி மாணவரைப்போல் இளமை யோடும், துடிப்போடும் காட்சியளித்தார். இவருடைய தோற்றமே அக்காவலாளியை ஏமாற்றி விட்டது.

கி. பி. 1953 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் மூன்ரும் நாள் பாராளுமன்ற மாளிகைக்குள் நுழைந்து பதவி ஏற்றுக் கொண்டார் கென்னடி. அமைச்சர்கள், தலைமை நடுவர்கள் வெளிநாட்டுத் தூதுவர்கள், உ ய ர் த ர அரசியற்றுறைத் தலைவர்கள், தொழிலதிபர்கள், தொழிலாளர் தலைவர்கள், புகழ் பெற்ற பத்திரிகையாளர்கள் ஆகியோர் அப்பேரவை யில் வீற்றிருந்தனர். ஜனநாயகக் கட்சித் தலைவர்களுக்குப்