பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46


பின் வரிசையில் கென்னடி சென்று அமர்ந்தார். தாம் வீற்றிருந்த இடத்திலிருந்து அப்பேரவையைச் சுற்றி ஒரு கண்ணுேட்டம் விட்டார். புகழ்பெற்ற அரசியல் தலைவர் களான ரிச்சர்ட் எம். நிக்சன், லிண்டன் பி. ஜான்சன், ஹியூபர்ட் ஹம்பிரி, பால் எச். டக்ளஸ் ஆகியோர் முன் வரிசையில் வீற்றிருந்தனர்.

கென்னடி மேல்சபை உறுப்பினராகப் பதவி ஏற்று இருவாரங்கள் கழித்து டுவைட் டி ஐசனேவர் அமெரிக்கத் தலைவராகப் பதவி ஏற்ருர். 1953-ஆம் ஆண்டு மேத்திங்கள் 18-ம் நாள் பிற்பகல் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் கென்னடி முதன்முதலாகப் பேசினர். தாம் பேசப் புகுந்த சொற்பொழிவை முன்கூட்டியே தயார் செய்து தாளில் எழுதி யிருந்தார். ஒற்றை நாடி உடம்பினரான .ெ க ன் ன டி. அரங்கில் நி மிர் ந் து நின்று சொற்பொழிவாற்றினர். அவருடைய முகத்தில் இளமையும், அறிவு முதிர்ச்சியும். பொறுப்புணர்ச்சியும் ஒரே சமயத்தில் தென்பட்டன. மூன்று நாட்கள் மேல்சபையில் அவர் சொற்பொழிவாற்றினர்.

கென்னடியின் சொற்பொழிவில் திட்டமான யோசனை களும், உண்மைகளும் நிறைந்திருந்தன. அவருடைய பேக்சு ஏறத்தாழ ஹார்வார்டு. வாணிகப் பள்ளியில் பொருளா தாரத்தைப் பற்றி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதைப் போலவே இருந்தது.

பேரவையில் கென்னடி நிகழ்த்திய பேச்சு சிறந்த ஒன்ருகும். அவருடைய பேச்சைக் கேட்ட மற்ற பாராளு மன்ற உறுப்பினர்கள் கென்னடியைப் பாராட்டினர். அப் பாராட்டு, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்தில் பேசியவுடன் வழக்கமாகப் பாராட்டும் முறையில் அமைந்திருக்கவில்லை; மிகுந்த உணர்ச்சியுடன் அவர்கள் பாராட்டினர்கள்.

مس- O ساس