பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. மண வாழ்க்கை

உருசியப் பிரதமர் குருச்சேவ் அமெரித்கா சென்றிருந்த போது கென்னடியின் மனைவியான ஜாக்குலினைக் கண்டு அளவளாவினர். அப்போது அவர், 'திருமதி கென்னடி யோடு பேசும்போது மொழிபெயர்ப்பாளரின் துணையே தேவைப்படவில்லை. அ வ ைர ப் பார்த்துக்கொண்டிருந் தாலே போதும். பேச்சே தேவையில்லை என்று குறிப் பிட்டார்.

  • அமெரிக்காவிலிருந்து எந்தப் பொருளேயாவது பிரெஞ்சு நாட்டிற்குக் கொண்டு வருவதாக இருந்தால், அது திருமதி கென்னடியாகத்தான் இருக்கும் ?? என்று பிரெஞ்சு நாட்டுத் தலைவரான திகால் ஒரு முறை குறிப்பிட்டார்.

கென்னடியின் அரசியலுக்கு உலகில் எந்த அளவுக்கு மதிப்புண்டோ, அந்த அளவு மதிப்பு ஜாக்குலினுடைய அழகிற்கும் உண்டு. கென்னடி தம்முடைய மனைவி மீது அளவற்ற பற்றும், அவளுடைய அழகின் மீது மட்டற்ற மதிப்பும் கொண்டிருந்தார். கென்ன்டி ஒரு முறை பிரெஞ்சு நாட்டில் சுற்றுச் செலவு மேற்கொண்டபோது ' நான் வேறு யாருமல்லன்; முன்பொருமுறை திருமதி ஜாக்குலின் என்ற நங்கையோடு உங்கள் நாட்டிற்கு வந்தவன்தான்’ என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார். மே ற் கூ றி ய எடுத்துக்காட்டுகளால் ஜாக்குலினுடைய அழகும், கென்னடி அவள் பால் கொண்டிருந்த அன்பும் புலப்படும்.

பாராளுமன்ற உறுப்பினர் கென்னடிக்கு வயது முப்பத்தாறு. இந்த வயதிலும் இவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த நிலை எல்லாருடைய கவனத்தையும் கவர்ந்தது. பெரும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த