பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48


அழகர் ஒருவர் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கின்ருர் என்ருல் பலரும் பலவிதமாகப் பேசத்தானே செய்வார்கள்!

மேல்சபை உறுப்பினரான கென்னடி அமெரிக்கா விலேயே எல்லோரும் விரும்பத்தக்க அழகிய பிரம்மச்சாரி! அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதில் நியாயமே இல்லை!” என்று போஸ்ட் என்ற செய்தித்தாள் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது.

கென்னடி உல்லாச இளம் பிரம்மச்சாரி' என்று வேறு சில செய்தித்தாள்களும் வர்ணிக்கத்தொடங்கிவிட்டன. ஆனல் திருமணத்தைப்பற்றி செய்தித்தாள்களில் பேச்சு அடிபடுவதற்கு முன்பாகவே கென்னடி ஒரு மங்கை நல்லாள் மீது அன்பு செலுத்தத் தொடங்கிவிட்டார். யார் அந்த நங்கை? அவள் தான் அறிவிலும், அழகிலும் ஒப்பற்று விளங்கிய குமாரி ஜாக்குலின் லீ பொவியர்.

கென்னடி சட்ட மன்ற உறுப்பினராக இருந்த காலத் தில் ஒரு விருந்தில் குமாரி ஜாக்குலினே எதிர்பாராமல் சந்திக் கும் வாய்ப்பு ஏற்பட்டது. ஒரு நண்பர் இரு வரை யும் அறிமுகம் செய்து வைத்தார். அப்பொழுதே குமாரி ஜாக்கு லினத் தம் மனைவியாக்கிக் கொள்ளத் தம் உள்ளத்தில் முடிவு செய்து கொண்டார். குமாரி ஜாக்குலினுக்கு அப்போது வயது இருபத்தொன் று.

திருவாளர் ஜான் லீ பொவியர் என்பாரின் திருமகளே ஜாக்குலின்; நியூயார்க்கிலும், வாஷிங்டனிலும் வளர்ந்தவள்; தலைநகரை அடைவதற்கு முன் வாஸ்ஸாரிலும், சார்போனிலும், கல்வி பயின்றவள். கென்னடியைப்போல் இவளும் பணக் காரக் குடும்பத்தில் பிறந்தவள்; கென்னடி வளர்ந்த அதே சமூகச் சூழ்நிலையில் வளர்ந்தவள்.

ஜாக்குலினிடம் அழகோடு வேறு சில பாராட்டிற்குரிய பண்புகளும் பொருந்தியிருந்தன. இவள் மிகவும் துணிச்சல் உடையவள்; குதிரை ஏற்றத்தில் மிகவும் வ ல் ல வ ள்.