பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49


குழந்தைப் பருவத்தில் ஜாக்குலின் பிரெஞ்சு மொழியை நன்கு பயின்ருள்; பிறகு ஸ்பானிய மொழியையும் கற்றுத் தேர்ச்சி பெற்ருள்.

ஒவியங்கள் வரைவதிலும், கவிதைகள் எழுதுவதிலும் இவள் மிகவும் ஆர்வம் காட்டினள். சேக்ஸ்பியரின் நாடகங் களில் இவளுக்கு அளவு கடந்த பற்று உண்டு. புகைப்படம் எடுக்கும் கலேயிலும் இவள் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தாள். இத்திறமைகளின் காரணமாகத்தான் ஜா க்கு லினுக்கு வாஷிங்டன் டைம்ஸ்ஹெரால்டு என்ற செய்தித்தாள் நிலையத் தில் வேலே கிடைத்தது. அமெரிக்க நாட்டில் வாழ்ந்த அரசியல் மேதைகள், கவிஞர்கள், கலைஞர்கள், தொழிலதி பர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோரை நேரில் கண்டு படமெடுத்து, அவருடைய பண்பு நலன்களை விளக்கிக் கட்டுரையாக்கி மேற்கூறிய செய்தித்தாள்களுக்கு அனுப்பு வதுதான் இவளுடைய வேலை. கென்னடி புகழ் மிக்க லாட்ஜை தேர்தலில் தோற்கடித்துப் பாராளுமன்ற உறுப்பின ராக வெற்றிபெற்றபோது அவரை சந்தித்து அவரைப் பற்றி செய்தித்தாளுக்கு எழுதும் வாய்ப்பையும் குமாரி ஜாக்குலின் பெற்ருள்.

கி. பி. 1951 ஆம் ஆண்டே கென்னடியும் ஜாக்குலி னும் முதன் முதலாகச் சந்தித்துப் ப ழ கு ம் வாய்ப்பைப் பெற்றனர். ஆனல் திருமணம் செய்துகொள்ள இருவரும் இரண்டாண்டுகள் பொறுத்திருக்க வேண்டியிருந்தது. கென்னடி பெரிய அரசியல்வாதி. அவருக்கு எப்போதும் வெளி வேலைகளே சரியாக இருக்கும். அடிக்கடி அவர் வெளியூர்களுக்கு சுற்றுப்பயணம் சென்று விடுவார். அதல்ை இருவரும் அடிக்கடி சந்திக்கமாட்டார்கள். கென்னடிக்கு ஒய்விருக்கும்போது இருவரும் சந்திப்பது வழக்கம். அச் சந்திப்பின்போது கென்னடி மணப்பொருள்களோ, ஆடை,

கெ-7