பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52


ஒரு நாள் செய்தித்தாள் நிருபர் ஒருவர் ஜாக்குலினைக் காண வந்தார். அவர் ஜாக்குலினைப் பார்த்து, ! உங்கள் மண வாழ்க்கை எப்படி இருக்கிறது ? திருவாளர் கென்னடி உங்களை விட்டுப் பிரியாமல் இருக்கிருரா?? என்று கேட்டார்.

அதற்கு ஜாக்குலின், அவருக்கு நான் வாஷிங்டனி லிருந்தாலும் ஒன்றுதான் ; ஆயிரம் கல் தொலைவுக்கு அப்பா லுள்ள அலாஸ்காவில் இரு ந்த லும் ஒன்றுதான் ?? என்று வேடிக்கையாகக் கூறினுள்.

ஜாக்குலின் சிலசமயம் தன்னுடைய கணவரைச் சலித்துக்கொண்டாலும் அவருடைய உள் ளத் ைத நன்கு புரிந்துகொண்டு வாழ்க்கை நடத்தினுள். முதலில் ஜாக்குலி னுக்குச் சற்றுத் தொல்லேயாக இருந்தது. எப்போதும் அரசி யல் வாதிகளின் கூட்டம் கென்னடியைச்சுற்றி மொய்த்துக் கொண்டிருக்கும். தம் மனேவியிடம் பேசும்போதுகூடக் .ெ க ன் ன டி அரசியலைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பார். இது ஜாக்குலினுக்குச் சற்று எரிச்சலாகவும் இருந்தது. ஜாக்குலின் கலை உள்ளம் படைத்தவள். கென்னடியோ தீவிர அரசியல் வாதி. இருவருடைய உள்ளச் சுவைகளும் அடிப்படையிலே முரண்பட்டவை.

ஜாக்குலின் காலப்போக்கில் தன்னுடைய உள்ளத்தை மாற்றிக் கொள்ளத் தொடங்கிள்ை. நிறைய அரசியல் நூல் களைப்படிக்கத் தொடங்கிள்ை. நாள்தோறும் செய்தித் தாள் களைக் கூர்ந்து படித்து நடப்பு அரசியலேயும் நன்கு அறிந்து கொண்டாள். அவளுக்கும் அரசியலில் ஒரு பிடிப்பு ஏற்படத் தொடங்கியது. இப்போது வாழ்க்கையில் சலிப்புத் தோன்ற வில்லை. கென்னடியின் அ ர சி ய ல் அவளுக்குத் தேனய் இனிக்கத் தொடங்கியது.

§

>

§

?