பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. புலிட்சர் பரிசு

கென்னடி இளைஞராக விருந்தபோது கால்பந்தாட்டத் தில் தமது முதுகெலும்பை முறித்துக்கொண்டார் என்றும், இராணுவ வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வெளி யேற அதுவே காரணமாக இருந்த தென்றும் நாம் முன் பு படித்தோம். அம்முதுகு வலி திருமணமாகி ஓராண்டு கழிந் ததும், மீண்டும் .ெ த ா ல் லே கொடுக்கத் தொடங்கியது. திருமணக் காலத்தில் மண்டியிட்டுக் கென்னடியால் ஆசி பெற முடியுமா ? என்று கூட நண்பர்கள் ஐயப்பட்டனர். கென்னடி தமது முதுகுவலியைக் குறைத்துக் கொள்வதற் காக எப்போதும் ஆடும் நாற்காலியையே பயன்படுத்துவது வழக்கம். என்ன செய்தும் அவருடைய முதுகுவலி குறை யவே இல்லே, கென்னடி இரண்டு ஊன்று கோல்களின் துணையால் நடக்கத் தொடங்கினர். அதுவும் பயன்தரவில்லை. மருத்துவர்கள் முதுகில் அறுவை மருத்துவம் செய்துகொண் டால் நல்லது என்று குறிப்பிட்டார்கள். .ெ க ன் ன டி யு ம் அதற்கு இசைந்தார்.

கி. பி. 1954 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 21 ஆம் நாள் அறுவை நடந்தது. ஒடிந்த எலும்புகளை மருத்துவர்கள் ஒட்டவைத்தார்கள். இவ்வறுவை மருத்துவத்தால் எதிர் பார்த்த பயன் ஒன்றும் கிட்டவில்லை. மீண்டும் தாங்கமுடியாத அளவு மு து கி ல் வலியெடுக்கத் தொடங்கியது. நான்கு தினங்களுக்குப் பிறகு மீண்டும் அறுவை மருத்துவம் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர். ' உயிர் போன லும் பரவாயில்லை ’ என்று எழுதிக் கொடுத்துவிட்டுக் கென்னடி அறுவை அரங்கத்துள் நுழைந்தார். இறுதி இறை வழிபாடு கூட இவர்பொருட்டுச் செய்யப்பட்டது நெருங்கிய உறவினர்கள் தவிர மற்றையோர் அருகில் அனுமதிக்கப்பட வில்லை. ஜாக்குலின் கணவன் அருகிலேயே இருந்து சலியா மல் தொண்டு செய்தாள்.