பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56


கருதும் அரசியல் குழு வி ன ர் கட்டுக் கட்டாகக் கடிதம் எழுதுவர். அவர்களுடைய கோரிக்கைகள் எல்லாவற்றையும் நிறைவேற்ற எந்த அரசியல்வாதியாலும் இயலாது என்று கென்னடி இந்நூலில் குறிப்பிடுகிருர்.

கென்னடியின் சி ந் த னை வளர்ச்சியிலும், அரசியல் வளர்ச்சியிலும் இந்நூல் ஓர் எல்லைக்கல் என்று குறிப்பிடலாம். இந்நூலின் இறுதியில், ' தம்முடைய தொகுதியிலும் சரி அல்லது நாட்டிலும் சரி, பொது மக்களின் எண்ணத்தையும் பொருட் படுத்தாமல், அறத்திற்காகவும், நாட்டின் முன்னேற் றத்திற்காகவும் போராடித் தோல்வியை எவன் ஏற்றுக்கொள் கிருனே, அவன்தான் உண்மையான அரசியல்வாதி ! ? என்று கூறிக் கென்னடி முடிக்கிருர். -

இந்நூல் எழுதப்பட்ட காலத்திலேயே கென்னடியின் உள்ளம் அறத்தின் அடிப்படையில் உலகத்தை எல்லையாகக் கொண்டு விரிந்துவிட்டது என்பதை உணரலாம். அறத்திற் காகப் போராடித் தோல்வியடைவதை அ ர சி ய ல் வீரம் என்று குறிப்பிட்ட கென்னடி, அறத்திற்காகப் போராடி உயிரையே பலிபீடத்தில் வைத்துவிட்டார் என்பது குறிப் பிடத்தக்கது. -

' தீரர்கள் வாழ்க்கை” க்கு, அமெரிக்காவிலே மிகவும் மதிப்பு வாய்ந்ததாகக் கருதப்படும் புலிட்சர் பரிசு கிட்டியது. இப்பரிசைப் பெற்றுக்கொண்ட போது, ' எனது வாழ்க்கை யில் இதைவிடப் பெரிய கெளரவம் எதுவும் எனக்குக் கிடைக் காது ' என்று கென்னடி குறிப்பிட்டார்.

இந்நூலுக்குக் கிடைத்த புலிட்சர் பரிசான 500 டால ரையும் கென்னடி ஐக்கிய நீக்ரோ கல்லூரி நிதிக்குப்பரிசாகக் கொடுத்துவிட்டார். அவ்வாண்டு உலகில் மி கு தி யா க விற்பனையான நூல்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது.